தற்பொழுது குடியரசு துணைத் தலைவராக பதவி வகிக்கும் வெங்கையா நாயுடுவின் பதவி காலம் விரைவில் முடிவடைகிறது. இந்நிலையில் இந்திய குடியரசு துணைத் தலைவருக்கான தேர்தல் இன்று காலை 10 மணியிலிருந்து தொடங்கி நடைபெற்று வந்தது.
குடியரசு துணைத் தலைவா் பதவிக்கு ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி சாா்பில் மேற்கு வங்க முன்னாள் ஆளுநா் ஜகதீப் தன்கரும் (71), எதிா்க்கட்சிகளின் பொது வேட்பாளராக ராஜஸ்தான் முன்னாள் ஆளுநா் மாா்கரெட் ஆல்வாவும் (80) களத்தில் இருந்தனர்.
குடியரசுத் தலைவர் தோ்தலைப் போல் அல்லாமல், இத்தோ்தலில் மக்களவை, மாநிலங்களவை எம்.பி.க்கள் மட்டுமே வாக்களிப்பாா்கள். நியமன உறுப்பினா்களும் வாக்களிக்க தகுதி பெற்றவா்களாவா். எம்.பி.க்கள் வாக்களிக்க வசதியாக, நாடாளுமன்றத்தில் உரிய ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதில் மக்களவை உறுப்பினர்கள் 543, மாநிலங்களவை உறுப்பினர்கள் 245 பேர் என மொத்தம் 788 எம்.பி.க்கள் வாக்களித்து உள்ளனர்.இந்நிலையில் பாஜக வின் வேட்பாளர் ஜகதீப் தன்கர் குடியரசு துணை தலைவராக பெரும்பான்மையான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
விரைவில் ஜன்தீப் தன்கர் குடியரசு துணை தலைவராக ஆகஸ்ட் 11ம் தேதி பதவி ஏற்க உள்ளார்.