மாதம் 150000 வருமானம் பெற எளிய வழி..100% பாதுகாப்பு ‘நோ ரிஸ்க்’..!

விலைவாசி உயர்வைப் பார்த்தால் நாளுக்கு நாள் ரிடையர்மென்ட் வாழ்க்கை மீது பயம் அதிகரித்துக் கொண்டே போகிறது என்றால் மிகையில்லை.

வாழ்வின் முக்கியமான காலகட்டத்தில் சரியான முதலீட்டுத் திட்டத்தைத் தேர்வு செய்து ஓய்வு காலத்தைப் பாதுகாப்பானதாக மாற்றிக்கொள்ள வேண்டியது மிகவும் அவசியம், குறிப்பாக இந்த நிலையற்ற வாழ்க்கை முறையில் பாதுகாப்பான ஓய்வூதியம் என்பது மிகவும் முக்கியமானது.

இப்படி இருக்கையில் மாதம் 1.5 லட்சம் ரூபாய் வருமானம் பெற எந்தத் திட்டத்தில் எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும், அனைத்தையும் தாண்டி பாதுகாப்பானதாக இருக்க வேண்டும்.

வாழ்க்கையின் பெரும் பகுதி ஓடி ஓடிச் சேர்த்த பணத்தை ஓய்வு காலத்தில் நம்மைப் பாதுகாக்க முதலீடு செய்யும் காரணத்தால் இத்தகைய திட்டத்தில் பாதுகாப்பு மிகவும் முக்கியம்.

BSNL ஊழியர்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை.. அதிரடி அறிவிப்பு ஏன்..?

இந்திய அரசு

இந்திய அரசு

இந்திய அரசு அளிக்கும் திட்டத்தை விட வேறு எந்தத் திட்டம் அதிகப் பாதுகாப்பைக் கொண்டு இருக்க முடியும், இந்திய அரசு மக்களின் ஓய்வு காலத்தைப் பாதுகாக்கத் தேசிய ஓய்வூதிய திட்டத்தை அளிக்கிறது. இத்திட்டத்தில் பாதுகாப்பு மட்டும் அல்லாமல் அனைத்து தரப்பினரும் முதலீடு செய்யும் வாய்ப்பு அளிக்கப்படுகிறது.

தேசிய ஓய்வூதிய திட்டம்

தேசிய ஓய்வூதிய திட்டம்

தேசிய ஓய்வூதிய திட்டம் என்பது நீண்ட கால அடிப்படையில் ஓய்வு காலத்திற்காக முதலீடு செய்யும் ஒரு திட்டம். இதில் முதலீடு செய்யவும் முடியும் அதேபோல் பென்ஷன்-ம் பெற முடியும் என்பதால் மக்கள் மத்தியில் நீண்ட காலமாக நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

பங்குசந்தை மற்றும் கடன் சந்தை
 

பங்குசந்தை மற்றும் கடன் சந்தை

இத்திட்டத்தில் முதலீடு செய்யும் பணத்தைப் பங்குசந்தை மற்றும் கடன் சந்தையிலும் பிரித்துப் பல அளவுகளில் முதலீடு செய்ய முடியும். இதன் மூலம் ஒருவர் தங்களின் விருப்பத்திற்கு ஏற்ப ரிஸ்க்-ன் அளவவை தீர்மானிக்க முடிவது மட்டும் அல்லாமல் திட்டமிட்டு லாபத்தை அதிகரிக்க முடியும்.

Annunity தேர்வு

Annunity தேர்வு

மேலும் இத்திட்டம் முடியும் போது ஒருவர் Annunity-ஐ முடிவு செய்ய வேண்டும் அதாவது நீங்கள் ஓய்வு பெறும் போதும் பெரிய தொகை வித்டிரா செய்யும் அளவு இதில் மொத்த முதலீட்டில் 60 சதவீதம் வரையில் வித்டிரா செய்ய முடியும் என்பதால் ஓய்வு பெறும் நேரத்தில் சரியாக நிதியியல் திட்டமிடல் செய்யும் வாய்ப்பு கிடைக்கும்.

60:40 விகிதம்

60:40 விகிதம்

உதாரணமாகத் தேசிய ஓய்வூதிய திட்டத்தில் நீங்கள் செய்யும் முதலீட்டை 60:40 ஆகப் பங்குச்சந்தை கடன் சந்தையில் பிரித்து முதலீடு செய்யும் பட்சத்தில் கட்டாயம் 10 சதவீதம் வருடாந்திர லாபம் கிடைக்கும். இந்த லாபம் பங்குச்சந்தையில் முதலீடு செய்யும் அளவு 80 சதவீதமாக மாறும் பட்சத்தில் லாபம் இன்னும் அதிகரிக்கும்.

மாதம் 10000 ரூபாய் முதலீடு

மாதம் 10000 ரூபாய் முதலீடு

இப்படியிருக்கையில் மாதம் 10000 ரூபாய் தேசிய ஓய்வூதிய திட்டத்தில் ஒருவர் (அந்த ஒருவர் நீங்களாகக் கூட இருக்கலாம்) 30 வருடத்திற்கு 60:40 முதலீட்டு விகிதத்துடன் முதலீடு செய்யும் பட்சத்தில் எவ்வளவு வருமானம் கிடைக்கும் தெரியுமா..?

lumpsum தொகை

lumpsum தொகை

ஒய்வு அடைந்த பின்பு lumpsum தொகையாக 1,36,75,952 ரூபாயும், தேர்வு செய்யப்பட்ட 40 சதவீதம் annunity தொகையை வைத்து மாதம் 45,587 ரூபாய் பென்ஷன் தொகை பெற முடியும்.

SWP திட்டம் தேர்வு

SWP திட்டம் தேர்வு

இதே திட்டத்தில் நீங்கள் systematic withdrawal plan (SWP) தேர்வு செய்தால் lumpsum தொகையில் இருந்து 25 வருடத்திற்கு ஒவ்வொரு மாதமும் 1.03 லட்சம் ரூபாய் பெற முடியும். இதன் மூலம் annunity தொகை சேர்த்து மாதம் 1.5 லட்சம் ரூபாயை பென்ஷன் தொகையைப் பெற முடியும்.

ஆனால் systematic withdrawal plan (SWP) திட்டம் என்பது lumpsum தொகை வேண்டாம் என முடிவு செய்பவர்களுக்கு மட்டும் தான் பொருந்தும்.

2027க்குள் 1 டிரில்லியன் டாலர் ஜிடிபி.. தமிழ்நாட்டுக்கு போட்டியாக உத்தர பிரதேசம்.. புதிய கூட்டணி..!

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

How to get Rs 150000 a month with just 10000 Monthly investment with National Pension Scheme

How to get Rs 150000 a month with just 10000 Monthly investment with National Pension Scheme மாதம் 150000 வருமானம் பெற எளிய வழி..100% பாதுகாப்பு ‘நோ ரிஸ்க்’..!

Story first published: Saturday, August 6, 2022, 20:19 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.