இந்தியாவின் மிகப்பெரிய வங்கியாக விளங்கும் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா ஜூன் காலாண்டு முடிவுகளை வர்த்தக விடுமுறை நாளான சனிக்கிழமை வெளியிட்டுள்ளது. வெள்ளிக்கிழமை வர்த்தக முடிவில் எஸ்பிஐ பங்குகள் மும்பை பங்குச்சந்தையில் 0.17 சதவீதம் சரிந்து 532.35 ரூபாயாக உள்ளது.
2022 ஆம் ஆண்டில் மட்டும் எஸ்பிஐ பங்குகள் சுமார் 13.07 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது, இதேபோல் கடந்த ஒரு மாதத்தில் 9.37 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. வெள்ளிக்கிழமை வர்த்தக முடிவில் எஸ்பிஐ வங்கியின் மொத்த சந்தை மதிப்பு 4.74 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது.
ஸ்டெர்லைட் ஆலை விற்பனை அறிவிப்பு.. வாங்குவதற்கு இத்தனை போட்டியா?
ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா
ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (SBI) சனிக்கிழமையன்று வெளியிட்ட காலாண்டு முடிவுகளில், நிகர லாபம் கடந்த ஆண்டு இதே காலாண்டில் 6,504 கோடி ரூபாய் பெற்று இருந்த நிலையில், தற்போது 6.70 சதவீதம் குறைந்து 6,068.08 கோடி ரூபாயாகக் குறைந்துள்ளது.
நிகர வட்டி வருமானம்
கடந்த ஆண்டின் இதே காலாண்டில் ரூ.27,638 கோடியாக இருந்த நிகர வட்டி வருமானம் (என்ஐஐ) தற்போது 12.87 சதவீதம் அதிகரித்து ரூ.31,196 கோடியாக உள்ளது. காலாண்டிற்கான நிகர வட்டி வரம்பு (NIM) முந்தைய ஆண்டின் காலாண்டில் 3.15 சதவீதத்திலிருந்து 8 அடிப்படை புள்ளிகள் உயர்ந்து 3.23 சதவீதமாக உயர்ந்துள்ளது.
செயல்படாத சொத்துகளின் விகிதம்
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் மொத்தச் செயல்படாத சொத்துகளின் விகிதம் 3.97 சதவீதத்திலிருந்து 3.91 சதவீதமாகக் குறைந்துள்ளதால், சொத்துத் தரம் மேம்பட்டுள்ளது. ஒதுக்கீடுகள் மார்ச் காலாண்டில் இருந்து 39 சதவீதம் சரிந்து ரூ.4,392.38 கோடியாக இருந்தது. ஸ்லிபேஜ் விகிதம் 1.38 சதவீதமாக உள்ளது.
இருப்பு நிலை அளவு
இதற்கிடையில், இந்தக் காலாண்டில் வங்கியின் இருப்பு நிலை அளவு ரூ.50 லட்சம் கோடியைத் தாண்டியது. இந்தக் காலாண்டிற்கான கடன் வளர்ச்சி 14.93 சதவீதமாக உள்ளது, அதே நேரத்தில் உள்நாட்டு அட்வான்சஸ் வளர்ச்சி ஆண்டுக்கு 13.66 சதவீதமாக உள்ளது.
வீட்டுக் கடன் வர்த்தகம்
மேலும் எஸ்பிஐ வீட்டுக் கடன் வர்த்தகம் கடந்த ஆண்டை காட்டிலும் 13.77 சதவீதம் வளர்ச்சியடைந்தது உள்ளது. கார்ப்பரேட் கடன் 10.57 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது, SME மற்றும் விவசாயக் கடன்கள் முறையே 10.01 சதவீதம் மற்றும் 9.82 சதவீதம் வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளன.
முகேஷ் அம்பானி, அனில் அம்பானி மோதல்.. மறக்க முடியாத 2002.. என்ன நடந்தது..?!
SBI Q1: Net profit down 6.7% at Rs 6,068 crore
SBI Q1: Net profit down 6.7% at Rs 6,068 crore ரூ.6,068 கோடி லாபத்தில் எஸ்பிஐ வங்கி.. வாராக் கடன் அளவு என்ன தெரியுமா..?