பாஜக பேரில் பண வசூலில் ஈடுபட்ட சின்னத்திரை நடிகை? – பாடலாசிரியர் சினேகன் போலீஸில் புகார்

விஜய் டி.வி-யில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மக்களிடையே பரவலாக பேசப்பட்டவர் பாடலாசிரியர் சினேகன். இவர் சினேகம் என்கிற பெயரில் கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் தொண்டு நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். இந்த நிலையில் சினேகன், தனது தொண்டு நிறுவனத்தின் பெயரைப் பயன்படுத்தி பா.ஜ.க பிரமுகரும், சின்னத்திரை நடிகையுமான ஜெயலட்சுமி பண வசூலில் ஈடுபடுவதாக காவல் ஆணையர் அலுவலகத்தில் நேற்று புகார் ஒன்றை அளித்துள்ளார்.

சினேகன்

இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த பாடலாசிரியர் சினேகன், கடந்த 2015ஆம் ஆண்டு முதல் சினேகம் பவுண்டேஷன் மூலமாக பல உதவிகளை செய்து வருகிறேன்.சமீப காலமாக இணையதளங்களில் எனது பவுண்டேஷன் பெயரை பயன்படுத்தி சிலர் பண வசூலில் ஈடுபடுவதாக தகவல் வந்தது.

இது தொடர்பாக விசாரித்தபோது, சமூக வலைதளப்பக்கத்தில் சினேகம் பவுண்டேஷன் என்ற பெயரை பயன்படுத்தி ஜெயலட்சுமி என்பவர் பண வசூலில் ஈடுபட்டது எங்களுக்கு தெரியவந்தது.

சின்னத்திரை நடிகை ஜெயலட்சுமி

இதனால் என்னுடைய வழக்கறிஞர் மூலமாக என் பெயரில் போலி தொண்டு நிறுவனம் நடத்திய நபரின் விலாசத்திற்கு நோட்டீஸ் அனுப்பிய போது விலாசம் தவறு என திரும்பி வந்ததாகவும், செல்போனில் தொடர்பு கொண்ட போது நேரில் சமாதானம் பேசி கொள்ளலாம் என அழைத்தார்கள். அதனால், சட்டரீதியாக புகார் அளிக்க வந்தேன்!’ என்றார்.

சினேகன்

மேலும், முறைப்படி மத்திய அரசு அங்கீகாரம் பெற்று என் சொந்த செலவில் சினேகம் என்கிற பெயரில் நான் தொண்டு நிறுவனத்தை நடத்தி வருகிறேன். என் பெயரை பயன்படுத்தி போலி தொண்டு நிறுவனம் நடத்தி வரும் ஜெயலட்சுமி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார். மேலும், நடிகை ஜெயலட்சுமியின் புகைப்படத்தை பயன்படுத்தி வேறு யாரேனும் மோசடி செய்கின்றனரா என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்த வேண்டும் என அவர் கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.