டாலர் முதல் CPI டேட்டா வரையிலான 5 முக்கிய காரணிகள்.. தங்கம் விலை எப்படியிருக்கும்?

தங்கம் விலையானது நடப்பு வாரத்தில் 1800 டாலர் வரையில் மீண்டும் தொட்டது. இது இப்படியே மீண்டும் ஏற்றம் காணலாமோ என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

சர்வதேச அளவில் நிலவி வரும் பல்வேறு பதற்றமான காரணிகளுக்கு மத்தியில், பொருளாதாரம் என்னாகுமோ என்ற அச்சமும் எழுந்துள்ளது. இதன் காரணமாக பாதுகாப்பு புகலிடமான தங்கம் விலையானது அதிகரிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில் வரும் வாரத்தில் தங்கம் விலையை தீர்மானிக்கும் 5 முக்கிய காரணிகள் பற்றி பார்க்க இருக்கிறோம்.

உலகின் காஸ்ட்லியான வைரம் எது.. எவ்வளவு மதிப்பு?

சிபிஐ தரவு

சிபிஐ தரவு

அமெரிக்காவின் நுகர்வோர் விலை குறையீடு குறித்தான தரவானது தங்கம் விலையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாமோ என்ற அச்சம் எழுந்துள்ளது. இது ஏற்கனவே ஜூன் மாதத்தில் 41 வருடங்களில் இல்லாத அளவுக்கு 9.1% ஆக உச்சம் தொட்டுள்ளது. ஆக இதற்கிடையில் வரவிருக்கும் சிபிஐ தரவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இது பாதுகாப்பு புகலிடமான தங்கத்திற்கு ஆதரவாக அமையலாம்.

அமெரிக்கா ஃபெடரல் வங்கி கூட்டம்

அமெரிக்கா ஃபெடரல் வங்கி கூட்டம்

அமெரிக்காவில் ஃபெடரல் ரிசர்வ் வங்கி கூட்டத்தில் வரும் வாரத்தில் முக்கிய விவாதங்கள் நடக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது வரவிருக்கும் நடவடிக்கை குறித்தான முக்கிய விவாதங்களும் இந்த கூட்டத்தில் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

டாலர் இன்டெக்ஸ்
 

டாலர் இன்டெக்ஸ்

அமெரிக்க டாலரின் மதிப்பானது 105 என்ற லெவலில் காணப்படுகின்றது. இது வரவிருக்கும் வாரத்தில் தங்கம் விலையினை நிர்ணயிக்கும் முக்கிய காரணிகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. இது சர்வதேச அளவில் நிலவி வரும் அரசியல் பதற்றங்களுக்கு மத்தியில், டாலரின் தங்கத்திற்கு ஆதரவாக அமையலாம். இதற்கிடையில் இந்திய ரூபாயும் மேற்கொண்டு தங்கம் விலையில் தாக்கத்தினை ஏற்படுத்த்தலாம்.

தாய்வான் - சீனா பிரச்சனை

தாய்வான் – சீனா பிரச்சனை

தாய்வான் மற்றும் சீனா இடையே நிலவி வரும் பதற்றமான நிலைக்கு மத்தியில், எந்த நேரத்தில் போர் வருமோ என்ற அச்சம் எழுந்துள்ளது. இதுவும் தங்கம் விலையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம். குறிப்பாக நான்சி பெலோசயின் தாய்வான் பயணத்திற்கு பிறகு தற்போது பதற்றம் அதிகரித்துள்ளது. இது மேற்கோண்டு தங்கத்திற்கு ஆதரவாக அமையலாம்.

தொழில்துறை குறியீடுகள்

தொழில்துறை குறியீடுகள்

வரும் வாரத்தில் வெளியாகவிருக்கும் தொழில்துறை உற்பத்தி குறித்தான தரவானது, சிபிஐ, பிபிஐ தரவு, ஓபெக் மாத தரவுகள், உள்ளிட்ட பலவும் வரவிருக்கும் வாரத்தில் இது தங்கம் விலையை தீர்மானிக்கும் முக்கிய காரணமாக அமையலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

5 Key Factors Determining Gold Prices From Dollar to CPI Data

5 Key Factors Determining Gold Prices From Dollar to CPI Data/டாலர் முதல் CPI டேட்டா வரையிலான 5 முக்கிய காரணிகள்.. தங்கம் விலை எப்படியிருக்கும்?

Story first published: Sunday, August 7, 2022, 16:14 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.