பொதுத்துறை வங்கியான கனரா வங்கியில் பிக்சட் டெபாசிட் வட்டி விகிதம் ,2 கோடி ரூபாய்க்குள்ளான டெபாசிட்களுக்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்திய ரிசர்வ் வங்கியானது ரெப்போ வட்டி விகிதத்தினை அதிகரித்துள்ள நிலையில், கனரா வங்கியில் டெபாசிகளுக்கான வட்டி விகிதமானது அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்த வட்டி அதிகரிப்பானது ஆகஸ்ட் 8, 2022 முதல் நடைமுறைக்கு வரவுள்ளது. இங்கு டெபாசிட்களுக்கு வட்டி விகிதமானது 10 வருடம் வரையிலான டெபாசிட் திட்டங்களுக்கு, 2.90%ல் இருந்து, 5.75% அக உள்ளது. இதே மூத்த குடிமக்களுக்கு 2.90%ல் இருந்து 6.25% ஆக உள்ளது.
டாலர் முதல் CPI டேட்டா வரையிலான 5 முக்கிய காரணிகள்.. தங்கம் விலை எப்படியிருக்கும்?
சாதரண பொதுமக்களுக்கு வட்டி விகிதம்?
7 நாள் முதல் 45 நாட்கள் வரையில் – 2.90%
46 நாட்கள் முதல் 90 நாட்கள் – 4%
91 நாட்கள் முதல் 179 நாட்கள் வரையில் – 4.05%
180 நாட்கள் முதல் 269 நாட்கள் – 4.65%
270 நாட்கள் முதல் 1 வருடத்திற்குள் – 4.65%
333 நாட்கள் – 5.10%
1 வருடம் – 5.50%
1 வருடத்திற்கு மேல் 2 வருடத்திற்குள் – 5.55%
666 நாட்கள் – 6%
2 வருடத்திற்கு மேல் 3 வருடத்திற்குள் – 5.60%
3 வருடத்திற்கு மேல் 5 வருடத்திற்குள் – 5.75%
5 வருடத்திற்கு மேல் 10 வருடத்திற்குள் – 5.75%
மூத்த குடிமக்களுக்கு வட்டி விகிதம்
7 நாள் முதல் 45 நாட்கள் வரையில் – 2.90%
46 நாட்கள் முதல் 90 நாட்கள் – 4%
91 நாட்கள் முதல் 179 நாட்கள் வரையில் – 4.05%
180 நாட்கள் முதல் 269 நாட்கள் – 5.15%
270 நாட்கள் முதல் 1 வருடத்திற்குள் – 5.15%
333 நாட்கள் – 5.60%
1 வருடம் – 6%
1 வருடத்திற்கு மேல் 2 வருடத்திற்குள் – 6.05%
666 நாட்கள் – 6.50%
2 வருடத்திற்கு மேல் 3 வருடத்திற்குள் – 6.10%
3 வருடத்திற்கு மேல் 5 வருடத்திற்குள் – 6.25%
5 வருடத்திற்கு மேல் 10 வருடத்திற்குள் – 6.25%
கடன் விகிதம் அதிகரிப்பு
கனரா வங்கியில் டெபாசிட்களுக்கு மட்டும் அல்ல, கடன்களுக்கான வட்டி விகிதமும் அதிகரித்துள்ளது. இதனால் கனரா வங்கியின் கடன் வாடிக்கையாளரகளுக்கு மாத தவணையும் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிகரிக்கப்பட்ட இந்த வட்டி விகிதமானது ஆகஸ்ட் 7 முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.
கடன்களுக்கு எவ்வளவு வட்டி?
ஆர்பிஐ வங்கியானது 50 அடிப்படை புள்ளிகள் வட்டி விகிதத்தினை அதிகரித்துள்ள நிலையில், ரெபோ விகிதமானது கொரோனாவுக்கு முந்தைய நிலையை எட்டியுள்ளது. இது தற்போது 5.15% ஆக அதிகரித்துள்ளது. இது கடந்த 3 முறையாக 140 அடிப்படை புள்ளிகள் அதிகரிக்கப்பட்டுள்ளது.
கனரா வங்கியின் வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதமானது 8.10% அதிகரித்துள்ளது. இதே பெண் வாடிக்கையாளர்களுக்கு 8.05% ஆகவும் அதிகரித்துள்ளது.
canara bank hiked deposit rate and loan rates: EMIs go to up
canara bank hiked deposit rate and loan rates: EMIs go to up/பிக்சட் டெபாசிட் செய்யப்போறீங்களா.. கனரா வங்கி வட்டி அதிகரிப்பு.. எவ்வளவு?