லக்னோ: உ.பி., மாநிலம் அயோத்தியில் சட்டவிரோதமாக நில விற்பனை செய்ததாக பா.ஜ., எம்.எல்.ஏ,. மற்றும் மேயர் உள்ளிட்ட 40 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
உ.பி., மாநிலத்தில் ராமர் கோயில் கட்டுமானம் பணி 40 சதவீதம் முடிவடைந்த நிலையில் உள்ளது. இந்நிலையில் இந்நகரில் மோசடியாக நிலவிற்பனை செய்ததாக பா.ஜ., எம்.எல்.ஏ.,வேத் பிரகாஷ் குப்தா மற்றும் மேயர் ரிஷிகேஷ்உபத்யாய் உள்ளிட்ட 40 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டது. இதனை மறுத்துள்ள எம்.எல்.ஏ.,மற்றும் மேயர் இது தங்களின் மீது திட்டமிட்டு பரப்பப்படும் குற்றச்சாட்டு என கூறினர். மேலும் அயோத்தி மேம்பாட்டு ஆணையம் ச்ட்ட விரோதமாக மனைகளை விற்பனை செய்துள்ளதாகவும், அந்த நிலங்களில் உள்கட்டமைப்புகளை உருவாக்குவதாகவும் குற்றம் சாட்டி உள்ளது. இந்த விவகாரத்தில் முன்னாள் பா.ஜ., எம்.எல்.ஏ., கோரக்நாத் பாபா என்பவரின் பெயரும் இடம்பெற்றுள்ளது.
அதே நேரத்தில் விஷால் சிங் என்பவர் செய்தியாளர்களிடம் கூறுகையில் சட்ட விரோதமாக நிலம் வாங்கி விற்பனை செய்து கட்டுமான பணிகளை மேற்கொண்டுள்ள 40 பேரின் விவரங்கள் அடங்கிய பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. அவர்கள் அனைவரின் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.
இந்த ஆண்டு துவக்கத்தில் மாநிலத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலுக்கு முன்னதாகவே அயோத்தியில் சட்ட விரோதமாக நிலம் வாங்குதல் மற்றும் விற்பனை செய்ததாக மாநிலத்தில் பல்வேறு கட்சிகள் குற்றச்சாட்டுகளை எழுப்பியதுடன் இது குறித்து விரிவாக விசாரணை நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்து இருந்தது. சமஜ்வாடி கட்சியை சேர்ந்த எம்.பி லல்லுசிங் என்பவர் இச்சம்பவத்தால் அரசுக்கு நிறைய வருவாய் இழப்பு ஏற்பட்டு உள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக சிறப்பு புலனாய்வுக்குழு மூலம் விசாரணை நடத்த வேண்டும் என முதல்வர் யோகிஆதித்யநாத்துக்கு கடடிதம் ஒன்றை எழுதி இருந்தார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement