போபால்: தேர்ந்தெடுக்கப்பட்ட பஞ்சாயத்து பெண் உறுப்பினர்களுக்கு பதிலாக அவரது ஆண் உறவு வழியினர் பதவிபிரமாணம் எடுத்துக்கொண்ட சம்பவம் ம.பி., மாநிலத்தில் அரங்கேறி உள்ளது.
ம.பி., மாநிலத்தில் சாகர் மற்றும் தாமோ உள்ளிட்ட மாவட்டங்களில் பஞ்., தேர்தல் நடந்து முடிந்தது.இம் மாவட்டங்களில் பெரும்பாலனவற்றில் பெண் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப் பட்டனர். இதனையடுத்து அவர்கள் பதவியேற்க அழைக்கப்பட்டனர். ஆனால் பெண் உறுப்பினர்களுக்கு பதிலாக தந்தை, சகோதரர், கணவர் என அவர்களது ஆண் வழி உறவு முறையினர் பதவி பிரமாணம் எடுத்து கொண்டனர். இச்சம்பவம் வீடியோவாக சமூக வலை தளங்களில் வைரலானது.
இதனையடுத்து ஆண்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்ததாக ஜெய்சிநகர் கிராம பஞ்சாயத்து செயலாளர் ஆஷாராம் சாஹுவை சஸ்பெண்ட் செய்து சாகர் மாவட்ட பஞ்சாயத்து தலைமை செயல் அதிகாரி உத்தரவு பிறப்பித்தார். சம்பவம் குறித்து சாஹூவிடம் கேட்டதற்கு பதவி ஏற்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுமாறு பலமுறை அழைப்பு விடுத்த போதிலும் பெண்கள் வரத்தவறினர். இதனையடுத்து குடும்பத்தின் ஆண் உறுப்பினரகள் பதவி பிரமாணம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.
கிராம பஞ்., உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்ட 10 பெண்களில் ஒருவரின் தந்தை, இரு பெண்களின் கணவர்கள், மற்றொரு பெண்ணின் மைத்துனர், இன்னும் சிலரின் சகோதரர்கள் பதவி பிரமாணம் எடுத்துகொண்டனர்.
அதே போல் தாமோ மாவட்டத்தில் உள்ள கைசாபாத் பிபரியா கிராவ் கிராம பஞ்,,சில் ஆண் உறுப்பினர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து மாவட்ட கலெக்டர் கிருஷ்ண சைதன்யா ஜன்பத் பஞ்சாயத்து அதிகாரிகளிடம் அறிக்கை கேட்டுள்ளதாக கூறப்படுகிறது. அறிக்கை கிடைத்த பின்னர் சம்பந்தப்பட்ட ஊராட்சி செயலாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் கூறி உள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement