திருமலை: ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தை சேர்ந்த வாலிபர் செவூரிசந்திரா (30). இவர், சில ஆண்டுகள் கூடூர் மற்றும் திருப்பதியில் உள்ள தனியார் நிறுவனங்களில் பணிபுரிந்தார். திருப்பதியில் பணிபுரியும்போது பஸ் நிலையத்தை சுற்றியுள்ள வீடுகளில் தனியாக வசிக்கும் பெண்களிடம் ஆதரவாக பேசுவாராம். தான் மிகவும் வசதியானவன், தங்க நகை வியாபாரம் செய்வதாக ஆசைவார்த்தைகளை கூறுவாராம். இதில் மயங்கும் பெண்களிடம் உல்லாசமாக இருப்பாராம். சில பெண்களை ஓட்டலுக்கு அழைத்துச் சென்று தூக்க மாத்திரைகளை கொடுத்து உல்லாசமாக இருந்துள்ளார். அப்போது அவர்கள் அணிந்திருக்கும் நகைகளை பறித்துக்கொண்டு தலைமறைவாகிவிடுவாராம். இவரால் ஏமாற்றப்படும் பெண்கள் சிலர் வெளியில் சொன்னால் அவமானம் என கருதி புகார் தெரிவிக்கவில்லை. மாநிலத்தில் பல்வேறு இடங்களை சேர்ந்த பெண்களை இவ்வாறு சீரழித்துள்ளார்.இவர் மீது திருப்பதி, நெல்லூர், விஜயவாடா, குண்டூர், ஏலூர் ஆகிய காவல் நிலையங்களில் 2010ம் ஆண்டு முதல் 30 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 2 முறை சிறைக்கு சென்று வந்துள்ளார். கடந்த ஜனவரி, ஜூன் மாதத்தில் விஜயவாடாவில் உள்ள பவானிபுரத்தை சேர்ந்த பெண்ணிடம் பேச தொடங்கி ஓட்டலுக்கு அழைத்து சென்றுள்ளார். பின்னர், குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து உல்லாசமாக இருந்துள்ளார். மயங்கிய பெண்ணிடம் இருந்த 4.5 சவரன் தங்க நகைகளை எடுத்து கொண்டு தப்பிச்சென்றார்.இதேபோல், கிருஷ்ணா லங்காவில் மற்றொரு பெண்ணை ஏமாற்றி 10 சவரனை எடுத்துக் கொண்டு சென்றுள்ளார். இதுகுறித்து பாதித்த பெண் ஒருவர் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிந்து கிருஷ்ணா நகர் அருகே பண்டித தெரு பஸ் நிலையத்தில் பதுங்கியிருந்த செவூரிசந்திராவை நேற்று கைது செய்து விசாரித்தனர். விசாரணையில் மேற்கண்ட தகவல்கள் வெளியானது. இதையடுத்து அவரிடமிருந்து, ₹5 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.