திண்டுக்கல் மாவட்டத்தில் பெற்றோர் இறந்ததால் மன வேதனை அடைந்த பெண் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் முத்துலாபுரத்தைச் சேர்ந்தவர் சுந்தர்ராஜன். இவரது மகள் நாகலெட்சுமி (44). இவருக்கு திருமணமாகவில்லை என்பதால் பெற்றோருடன் வசித்து வந்தார்.
இந்நிலையில் தந்தை சுந்தரராஜன் கடந்த சில வருடங்களுக்கு முன்பு உயிரிழந்துள்ளார். இதையடுத்து நாகலட்சுமி, தனது தாயுடன் வசித்து வந்தார்.
ஆனால் சில நாட்களுக்கு முன்பு நாகலட்சுமியின் தாயாருக்கு உடல்நிலை குறைவு ஏற்பட்டதால் அவரும் உயிரிழந்து உள்ளார்.
இதையடுத்து பெற்றோர் இறந்ததால் மனவேதனை அடைந்த நாகலட்சுமி வாழ்க்கையில் வெறுப்படைந்து அப்பகுதியில் இருந்த கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் நாகலட்சுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த சம்பவம் குறித்து பட்டிவீரன்பட்டி காவல்துறையினர், வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.