மக்களின் எதிர்பார்ப்புக்களுக்கும் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கும் தீர்வுகளை பெற்றுக்கொடுக்கும் நோக்கமாகக் கொண்டே அமைச்சின் செயற்பாடுகள்

மக்களின் எதிர்பார்ப்புக்களையும், மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளையும் முடிந்தளவு தீர்த்துக்கொள்வதை நோக்காகக் கொண்டே கடற்றொழில் அமைச்சின் செயற்பாடுகள் அமைய வேண்டும் என்பதே தனது  எதிர்பார்ப்பு என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். 

கடற்றொழில் மற்றும் நீரியல்வளத் திணைக்களத்தின் பணிப்பாளர்கள் மற்றும் நிறைவேற்று அதிகாரிகளுடன்  (08) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே கடற்றொழில் அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.

முறைகேடுகள் – துஸ்பிரயோகங்கள் அற்ற வகையில், கடற்றொழில் அமைச்சின் செயற்பாடுகள் மக்களை சென்றடைவது உறுதிப்படுத்தப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.

இதேவேளை டிக்கொவிற்ற, உஸ்வெட்டி கெய்யாவ பிரதேசத்தினை சேர்ந்த கடற்றொழிலாளர்கள் அமைச்சு அலுவலகத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை (08) சந்தித்து, எரிபொருள் தட்டுப்பாடு, கடலரிப்பு, மணல் தூர்வாருதல் போன்ற விடயங்கள் தொடர்பாக அவதானம் செலுத்தி, தாங்கள் எதிர்கொள்ளும் தொழில்சார் அசௌகரியங்களுக்கு முடிவு கட்டுமாறு வேண்டுகோள் விடுத்தனர்.

இச்சந்திப்பின் போது, வர்த்தக அமைச்சர் நளின் பெனான்டோ,அமைச்சின் செயலாளர் திருமதி இந்து இரத்நாயக்கா மற்றும் சம்மந்தப்பட்ட அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

Epdp
 
Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.