தங்கம் உலகில் அதிகளவில் வைத்திருக்கும் நாடு எது? எவ்வளவு தங்கம் இருக்கலாம்? அதன் மதிப்பு என்ன? என்றேனும் யோசிதிருப்போமா? இது இந்திய போன்ற நாடுகளில் அதிகம் விரும்பப்படும் ஆபரணமாக இருந்தாலும், மற்ற உலக நாடுகளில் முக்கிய முதலீட்டு அம்சமாக பார்க்கப்படுகிறது.
குறிப்பாக பொருளாதார நெருக்கடி காலக்கட்டத்தில் பாதுகாப்பு புகலிடமாக இருக்கிறது.
ஆக தங்கமானது மிக முக்கியமான முதலீடுகளில் ஒன்றாகவும் இருந்து வருகின்றது. சொல்லப்போனால் முதலீட்டு போர்ட்போலியோவில் தங்கத்திற்கான இடம் இல்லாமல் இருக்காது.
12 வயதில் 3 ஆப்… கின்னஸ் சாதனை செய்த சிறுவன்.. கோடிக்கணக்கில் வருவாய் கிடைக்க வாய்ப்பு!
தங்கத்தினை வாங்கி குவிக்கும் அரசுகள்
ஒவ்வொரு நாட்டின் அரசும் தங்கத்தினை வாங்கி வைக்கிறது. மத்திய வங்கிகள் தங்கத்தினை டெபாசிட் செய்து வைத்துள்ளன. இது வெறுமனே முதலீடு என்பதை விட ஒரு நாட்டிற்காக பொருளாதார அங்கீகாரத்திலும் முக்கிய பங்கு வகிக்கின்றது. அப்படிப்பட்ட தங்கத்தினை யார் அதிகம் வைத்துள்ளது. கோல்டு ஹப் கொடுத்துள்ள தரவின் படி நடப்பு ஆண்டின் முதல் காலாண்டில் 30 நாடுகளிடம் உள்ள இருப்பு எவ்வளவு என்பதை பார்க்கலாம்.
டாப் அமெரிக்கா தான்
உலகின் முன்னணி பொருளாதார நாடான அமெரிக்கா தான் தங்கம் இருப்பிலும் முதலிடத்தில் உள்ளது. அமெரிக்காவின் வசம் சுமார் 8133.47 டன் தங்கம் உள்ளது. இது ஜெர்மனி, இத்தாலி, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளை சேர்த்து ஒட்டுமொத்தமாக வைத்துள்ள தங்கத்தினை வைத்துள்ளது. இது அமெரிக்க டெபாசிட்டரிகளில் அதிகளவில் உள்ளதாக கூறப்படுகிறது. இதன் மொத்த மதிப்பு சுமார் 712 பில்லியன் டாலராகும்.
இரண்டாவது இடத்தில் ஜெர்மனி
இரண்டாவது இடத்தில் உள்ள ஜெர்மனி வசம் 3358.5 டன் தங்கம் உள்ளது. இது 2021 இறுதியில் 3359.09 டன் உள்ளது. ஜெர்மனியின் பொருளாதாரம் நடப்பு ஆண்டில் 4200 பில்லியன் டாலர் வளர்ச்சி காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதே அடுத்த ஆண்டில் 4680 பில்லியன் டாலராக இருக்கலம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதன் பொருளாதாரம் வலுவாக காணப்படும் நிலையில், அதன் தங்கம் இருப்பும் வலுவாக காணப்படுகிறது.
இத்தாலி
மூன்றாவது இடத்தில் உள்ள இத்தாலியின் வசம் 2541.84 டன் தங்கம் உள்ளது. இது பிரான்சிடம் இருப்பதை விட சற்று அதிகமாகும். 2019ல் இத்தாலியில் நிலவிய பட்ஜெட் பிரச்சனைக்கு மத்தியில் கூட ஒரு கிராம் தங்கத்தினை கூட விற்க மாட்டோம் என்று கூறியது. தற்போது வரையிலும் அதனை மெய்பிக்கும் விதமாக தங்கம் அப்படியே வைத்துள்ளது.
பிரான்ஸ்
4வது இடத்தில் உள்ள பிரான்சில் 4367.47 டன் தங்கம் உள்ளது. இது கடந்த ஆண்டினை காட்டிலும் 0.3 டன் அதிகரித்துள்ளது. இதில் சிறிய பங்கு அண்டை நாடுகளில் வைத்துள்ளதாகவும், எனினும் பெரும்பங்கு பிரான்ஸ் வங்கியில் உள்ளதாகவும் கூறப்படுகிறது. 2009ல் இருந்து பிரான்ஸ் வசம் உள்ள தங்கம் இருப்பு பெரியளவில் மாற்றமின்றி அப்படியே தான் காணப்படுவதை தரவுகள் மூலம் அறிய முடிகிறது.
ரஷ்யா
ஐந்தாவது இடத்தில் உள்ள ரஷ்யாவில் 2301.64 டன்னாக உள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் அதன் தங்க இருப்பினை அதிகரிக்க, 40 பில்லியன் டாலரினை செலவழித்துள்ளது. எனினும் ரஷ்யாவால் போதிய அளவில் இருப்பினை வைக்க முடியவில்லை. எனினும் கடந்த ஆண்டு மூன்றாவது காலாண்டினை காட்டிலும் 6.22% அதிகரித்துள்ளது.
சீனா
உலகின் முன்னணி நுகர்வோராக இருந்தாலும் சீனாவின் வசம் 1948.31 டன்னாக இருப்பு உள்ளது. இது உலகின் மிகப்பெரிய தங்கம் உற்பத்தியாளராகும். உலகின் தங்க சுரங்க உற்பத்தியில் 12% பங்கினை வைத்துள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன.
சுவிட்சர்லாந்து
சர்வதேச அளவில் 7வது இடத்தில் உள்ள சுவிட்சர்லாந்து வசம், 1040 டன் தங்கம் உள்ளது. இதில் பெரும்பகுதி பாங்க் ஆப் இங்கிலாந்து மற்றும் பாங்க ஆப் கனாடாவில் சேமிக்கப்பட்டுள்ளது. இது கடந்த 2014ல் சுவிஸ் வங்கியில் தங்க சேமிப்பினை அதிகப்படுத்தலாமா? என்ற வாக்கெடுப்பினை நடத்தியது குறிப்பிடத்தக்கது.
ஜப்பான்
குட்டி நாடான ஜப்பான் வசம் 845.97 டன் தங்கம் உள்ளது. டிசம்பர் 2020ல் கொரோனா காலத்தில் நிதி உதவியினை அளிப்பதாக, நாணயங்களை அச்சிடுவதற்கு 80 டன் தங்கத்தினை விற்பனை செய்தது. ஜப்பானில் சிறிய அளவிலான தங்கம் இருக்கும் நிலையில், அதனை வெட்டி எடுக்க ஜப்பான் நினைப்பதாக என கூறப்படுகிறது.
இந்தியா
இந்தியா டாப் 10 பட்டியலில் 9வது இடத்தில் உள்ள நாடாகும். இந்தியா வசம் 760.4 டன் தங்கமே உள்ளது. கடந்த சில ஆண்டுகளில் இந்தியாவின் வசம் உள்ள தங்கம் 150 டன் அதிகரித்துள்ளது. இந்தியாவில் குறிப்பாக தங்க நகை வடிவில் அதிக இருப்புகள் உள்ளன.. இந்தியா வசம் சிறிய அளவிலான தங்க சுரங்க தொழில் இருந்தாலும், அது தேசிய அளவிலான தேவையை ஆதரிக்க போதுமானதாக இல்லை. பெரும்பாலான நாடுகள் கொரோனா காலத்தில் தங்கத்தினை விற்பனை செய்தன. ஆனால் இந்தியா தான் அதிகரித்துள்ளது.
இதே 10 வது இடத்தில் நெதர்லாந்து உள்ளது. இதன் வசம் 612.45 டன் தங்கம் உள்ளது.
500 டன்னுக்கு கீழாக இருப்பு
துருக்கி – 431.1 டன்
தாய்வான் – 423.63 டன்
போர்ச்சுகல் – 382.57 டன்
கஜகஸ்தான் – 368.12 டன்
உஸ்பெகிஸ்தான் – 337.47 டன்
சவுதி அரேபியா – 323.07 டன்
இங்கிலாந்து – 310.29 டன்
லெபனான் – 286.83 டன்
ஸ்பெயின் – 281.58 டன்
ஆஸ்ட்ரியா – 279.99 டன்
தாய்லாந்து – 244.16 டன்
போலந்து – 228.66 டன்
பெல்ஜியம் – 227.4 டன்
அல்ஜீரியா – 173.56 டன்
வெனிசுலா – 161.22 டன்
பிலிப்பைன்ஸ் – 156.29 டன்
சிங்கப்பூர் – 153.74 டன்
பிரேசில் – 129.56 டன்
ஸ்வீடன் – 125.72 டன்
தென் ஆப்பிரிக்கா – 125.35 டன்
Which 30 countries have the most gold in the world?
Which 30 countries have the most gold in the world?/தங்கத்தை மலையாய் குவித்து வைத்திருக்கும் நாடு எது..!