குழந்தைகளாக இருக்க யாருக்குத்தான் பிடிக்காது. ‘வெயிலோடு விளையாடி, வெயிலோடு உறவாடி’ என்று குறும்புகளோடு கூடிய வாழ்க்கை. அதிலும் எந்தத் துயரமும் சூழாத அந்த வாழ்க்கைக்கு மீண்டும் திரும்ப பலருக்கும் ஆசை இருக்கும்.
குழந்தைகளாக இருப்பதில் இன்னொரு நன்மையும் உண்டு. எந்த இடத்துக்குச் சென்றாலும் குழந்தைகள் செலவு செய்யத் தேவையில்லை. வீட்டிலுள்ள பெரியவர்கள் பார்த்துக் கொள்வார்கள்.
இதற்கு நேர்எதிராக, ஒரு சிறுவனிடம், நீ சாப்பிட்ட உணவுக்கு நீதான் பணம் தரவேண்டும் என்று கேட்டால் எப்படி இருக்கும்…
அப்படியான ஒரு நகைச்சுவை வீடியோதான், இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் தந்தையும், குட்டி மகனும் உணவகம் ஒன்றில் சாப்பிட்டு முடிக்கின்றனர். அதன் பிறகு, பில் கொடுக்கும் நேரம் வரும்போது, அந்த மகனிடம் தந்தை “இந்தப் பணத்தை நீதான் கொடுக்க வேண்டும். இது உன்னுடைய டர்ன்” என்கிறார்.
இதென்ன புதுசா இருக்கு என சற்று குழம்பிய நிலையில் சிந்திக்கிறான் சிறுவன். மீண்டும் அந்தச் சிறுவனிடம் “உன்னைத்தான் கேட்கிறேன். உன்னிடம் பணம் இருக்கிறதா” எனக் கேட்டதும், சற்று யோசித்தவனாக, ‘இப்போது இந்தத் தொகையை நீங்கள் கொடுத்துவிடுங்கள், வீட்டிற்குச் சென்றதும் அந்தப் பணத்தை நான் கொடுத்து விடுகிறேன்’ என்கிறான். அதைக் கேட்டதும், அடக்கமுடியாமல் சிரிக்கிறார், தந்தை.
இணையத்தில் பகிரப்பட்ட இந்த வீடியோ 7.4 மில்லியனுக்கும் மேல் பார்க்கப்பட்டுள்ளது. அனைவரையும் கவரும் வகையில் உள்ள இந்த வீடியோவிற்கு கமென்டுகளும் குவிந்த வண்ணம் உள்ளன.