திமுக பிரமுகர் சரமாரியாக வெட்டிக்கொலை.. திருத்தணியில் பரபரப்பு..!

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி ஜெ.ஜெ.நகர் பகுதியில் வசித்து வந்தவர் மோகன். திமுக பிரமுகரான இவர் நேற்று இரவு 10 மணியளவில் தனது வீட்டுக்கு சென்று கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத மூன்று பேர் மோகனை வழிமறித்து முகம் மற்றும் உடலில் பல்வேறு இடங்களில் சரமாரியாக வெட்டி படுகொலை செய்து விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

அந்த வழியாக வந்த பொதுமக்கள், உயிருக்கு போராடிக்கொண்டிருந்த மோகன் குறித்து அவருடைய உறவினருக்கும், காவல்துறைக்கும் தகவல் தெரிவித்தனர்.

உடனடியாக மோகன் திருத்தணி அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டார். எனினும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து திருத்தணி சட்டம் ஒழுங்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து மோகனை கொலை செய்து தப்பிய கொலையாளிகளை தேடி வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டத்தில் திமுக பிரமுகர் அடையாளம் தெரியாத நபர்களால் சரமாரியாக வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.