காலி பால் பாக்கெட் கொடுத்தால் பெட்ரோலுக்கு 1 ரூபாய் தள்ளுபடி..!

உங்க வீட்டில் காலி பால் பாக்கெட் கவர் இருக்கா? அப்படின்னா உங்களுக்கு பெட்ரோல் கம்மி விலையில் கிடைக்கும். உண்மை தான் ராஜஸ்தான் மாநிலத்தில் தான் இப்படி ஒரு சூப்பரான அறிவிப்பு வந்துள்ளது.

அதெல்லாம் சரி யாரிந்த அறிவிப்பினை கொடுத்துள்ளது? எதற்காக இப்படி ஒரு அறிவிப்பு? அதுவும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உச்சத்தில் உள்ள இந்த நேரத்தில் இப்படி ஒரு அறிவிப்பு எதற்காக? வாருங்கள் பார்க்கலாம்.

12 வயதில் 3 ஆப்… கின்னஸ் சாதனை செய்த சிறுவன்.. கோடிக்கணக்கில் வருவாய் கிடைக்க வாய்ப்பு!

பிளாஸ்டிக்கு எதிராக விழிப்புணர்வு

பிளாஸ்டிக்கு எதிராக விழிப்புணர்வு

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பில்வாரா என்ற பகுதியில் அசோக்குமார் முந்த்ரா என்பவர், பெட்ரோல் நிலையம் ஒன்றை நடத்தி வருகின்றார். இவர் பிளாஸ்டிக் பொருட்களுக்கு எதிராக விழிப்புணர்வு முகாம் நடத்த தொடங்கியுள்ளார். அதற்காகத் தான் இப்படி ஒரு அதிரடியான அறிவிப்பினையும் கொடுத்துள்ளார்.

தள்ளுபடி

தள்ளுபடி

இதற்காக சாராஸ் டைரி நிறுவனம் மற்றும் பில்வாரா மாவட்ட நிர்வாகம் மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் உதவியுடன் இந்த சலுகையினை அறிவித்துள்ளார். அதன்படி காலி பால் பாக்கெட்டுகளை கொடுத்தால் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் தள்ளுபடி கொடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

காலி பாகெட்டுகள் எதற்காக?
 

காலி பாகெட்டுகள் எதற்காக?

ஓரு காலி பால் பாக்கெட்டுக்கு 1 ரூபாயும், டீசலுக்கு 50 பைசாவும் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பானது ஜூலை 15 அன்று தொடங்கப்பட்டது. முந்த்ரா 700 காலி பாக்கெட்டுகளை இதுவரையில் பெற்றுள்ளராம். அதோடு காலி வாட்டர் பாட்டில்களும் இதில் அடங்கும். இவ்வாறு பெறப்படும் காலி பாட்டில்கள், காலி பால் பாகெட்டுகள் சாராஸ் டைரிக்கு வழங்கப்படுகிறது.

 நீட்டிக்க திட்டம்

நீட்டிக்க திட்டம்

இது ஒரு முறை மட்டும் பயன்படுத்தும் பிளாஸ்டிக்கு எதிரான விழிப்புணர்வாக உள்ளது. இது மனிதர்களுக்கு மட்டும் அல்லாது, விலங்குகளுக்கும் தீங்கு விளைவிக்கும் ஒன்றாக உள்ளது. சுகாதாரத்தினையும் மேம்படுத்த உதவும். நெகிழி இல்லாத நகரத்தை உருவாக்குவதே எனது கனவு. தற்போது திரும்ப பெறப்பட்டுள்ள பாகெட்டுகளின் எண்ணிக்கை குறைவு தான். ஆக அறிவிப்பினை 6 மாதம் வரையில் நீடிக்க திட்டமிட்டுள்ளேன்.

நகரம் முழுக்க செயல்படுத்த திட்டம்

நகரம் முழுக்க செயல்படுத்த திட்டம்

மேலும் நகரம் முழுவதும் உள்ள சாவடிகளில் காலி பைகளை சேகரிக்க தொடங்குமாறு சாரஸ் டெய்ரியிடம் கேட்டுக் கொள்வதாகவும், அதற்கு பதிலாக ஆறு மாதங்களுக்குள் எரிபொருள் பம்பில் திரும்ப பெறக்கூடிய கூப்பன்கள் மக்களுக்கு வழங்கப்படும் என்றும் முந்த்ரா கூறியுள்ளார். இது மக்களுக்கு மிக பயனுள்ள ஒன்றாக இருக்கும் என்று கூறியுள்ளார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

1 rupee discount on petrol and 50 paisa discount on diesel if you give an empty milk pouches

1 rupee discount on petrol and 50 paisa discount on diesel if you give an empty milk pouches/காலி பால் பாக்கெட் கொடுத்தால் பெட்ரோலுக்கு 1 ரூபாய் தள்ளுபடி..!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.