Robotaxi: ஓரே நேரத்தில் அமெரிக்கா, சீனா நிறுவனங்கள் அறிவிப்பு..!

உலகில் தொழில்நுட்பம் வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் நிலையில் ஆட்டோமொபைல் துறையின் உச்சமாக கருதப்படும் தானியங்கி கார்-ஐ முதலில் வெற்றிகரமாகவும், 100 சதவீத நம்பகத் தன்மை உடனும் மக்களின் பயன்பாட்டுக்குக் கொண்டு வந்த பெருமை டெஸ்லா நிறுவனத்திற்கு உண்டு.

இந்த வேளையில் தற்போது ரோபோடாக்சி (Robotaxi) என்ற பெயரில் அமெரிக்காவின் டெஸ்லா நிறுவனமும், அதேபெயரில் சீனாவின் கூகுள் என அழைக்கப்படும் Baidu நிறுவனமும் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

ஹரியானா மாநிலத்தில் அப்பல்லோ… ரூ.450 கோடிக்கு வாங்கிய மருத்துவமனை!

எலான் மஸ்க்

எலான் மஸ்க்

டெஸ்லா சிஇஓ எலான் மஸ்க் இந்நிறுவனத்தின் வருடாந்திர முடிவுகளை வெளியிடும் போது ரோபோடாக்சி திட்டம் குறித்துப் பேசினார். சமீபத்தில் டெஸ்லா தனது சார்ஜிங் ஸ்டேஷன்களைப் புதிய வர்த்தகத் தளமாக மாற்ற டெஸ்லா சூப்பர் சார்ஜிங் ஸ்டேஷன் பகுதியில் உணவகங்களை அமைக்க முடிவு செய்து அதற்கான பணிகளை டெஸ்லா செய்து வருகிறது.

டெஸ்லா-வின் Robotaxi திட்டம்

டெஸ்லா-வின் Robotaxi திட்டம்

இந்நிலையில் டெஸ்லா-வின் Robotaxi திட்டம் குறித்து எலான் மஸ்க் பேசியுள்ளார், தனது நிறுவனத்தின் Full Self-Driving (FSD) செயல்பாட்டுக்கு வந்த உடன் டெஸ்லா கார் உரிமையாளர்கள் தங்களது காரை தாங்கள் மட்டும் பயன்படுத்தலாம் அல்லது விருப்பம் இருந்தால் கூடுதலாகப் பணம் சம்பாதிக்க Robotaxi திட்டத்தில் சேர்த்து டாக்சி பணத்தைச் சம்பாதிக்க முடியும்.

டாக்சி சேவை
 

டாக்சி சேவை

Robotaxi சேவை என்பது டிரைவர் இல்லாமல் தானாக இயங்க கூடிய டெஸ்லா கார்களை வைத்து டாக்சி சேவை அளிப்பது தான். இதன் மூலம் அமெரிக்காவில் டாக்சி சேவை அளிக்கும் நிறுவனங்கள் வியப்பிலும், அதிர்ச்சியிலும் உள்ளது என்றால் மிகையில்லை.

Airbnb மற்றும் Uber

Airbnb மற்றும் Uber

டெஸ்லா-வின் ரோபோடாக்சி சேவை திட்டம் என்பது கிட்டத்தட்ட Airbnb மற்றும் Uber நிறுவனங்களின் கலவை என எலான் மஸ்க் கூறியுள்ளார். இத்திட்டம் மூலம் டெஸ்லா வாகனங்களின் பயன்பாடு ஒரு வாரத்திற்கு 12 மணிநேரத்தில் இருந்து 60 மணிநேரமாக உயரும். இது மட்டும் அல்லாமல் டெஸ்லா உரிமையாளர்கள் கூடுதலாக வருமானத்தைப் பெற முடியும் எலான் மஸ்க் கூறியுள்ளார்.

சீனாவின் கூகுள் Baidu

சீனாவின் கூகுள் Baidu

இதேபோல் சீனாவின் கூகுள் என அழைக்கப்படும் Baidu திங்கட்கிழமை விரைவில் சோங்கிங் மற்றும் வுஹான் நகரங்களில் ஆளில்லா தானாக இயங்க கூடிய டாக்ஸி சேவையை அளிக்கத் தனது தானியங்கி டாக்சி சேவை பிரிவான Apollo Go அரசிடம் இருந்து உரிமம் பெற உள்ளதாகத் தெரிவித்துள்ளது.

சோங்கிங் மற்றும் வுஹான்

சோங்கிங் மற்றும் வுஹான்

பெய்ஜிங்கில் திறந்த சாலைகளில் ஓட்டுநர் இல்லாத கார்களை இயக்குவதற்கான பெர்மிட்டை Baidu பெற்றுள்ளது. ஆனாலும் இதற்கு ஒட்டுனர் சீட்டில் டிரைவர் இருக்க வேண்டும். இந்நிலையில் முதல் முறையாகச் சீனாவில் சோங்கிங் மற்றும் வுஹான் நகரங்களில் ஒட்டுனர் சீட்டில் டிரைவர் இல்லாமல் கார்களை இயக்க அனுமதி வாங்க உள்ளது பைடூ.

சேவை நேரம்

சேவை நேரம்

வுஹானில், Baidu இன் சேவை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படும் மற்றும் 13 சதுர கிமீ பரப்பளவில் மட்டுமே ஆளில்லா டாக்சி சேவையை அளிக்கும். சோங்கிங்கில், இந்தச் சேவை காலை 9:30 மணி முதல் மாலை 4:30 மணி வரை இயங்கும், இந்த ஊரில் 30 சதுர கிமீ பரப்பளவுக்குச் சேவை அளிப்பதாக baidu தெரிவித்துள்ளது.

அப்பல்லோ RT6 எலக்டரிக் கார்

அப்பல்லோ RT6 எலக்டரிக் கார்

கடந்த மாதம், Baidu அதன் ஆறாவது தலைமுறை எலக்ட்ரிக் ரோபோடாக்சி-யான அப்பல்லோ RT6 எலக்டரிக் காருக்கான வடிவமைப்புகளை வெளியிட்டது, இதன் விலை சுமார் $37,000 ஆகும். 2025 ஆம் ஆண்டுக்குள் 65 நகரங்களுக்கும், 2030 ஆம் ஆண்டுக்குள் 100 நகரங்களுக்கும் தனது ஆளில்லா டாக்சி சேவையை விரிவுபடுத்துவதற்கு Baidu திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

US Tesla, China Baidu entering into Robotaxi driverless taxi cars

US Tesla, China Baidu entering into Robotaxi driverless taxi cars Robotaxi: ஓரே நேரத்தில் அமெரிக்கா, சீனா நிறுவனங்கள் அறிவிப்பு..!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.