75ஆம் ஆண்டு சுதந்திர தினம்; மகாபலிபுரத்தில் சர்வதேச காத்தாடி திருவிழா

Chennai Tamil News: சுதந்திரத் தினத்தை ஒட்டி, சென்னையில் மக்களை மகிழ்விப்பதற்காக சில நிகழ்ச்சிகளை ஆகஸ்ட் 13ஆம் தேதி தொடங்கி 15ஆம் தேதி வரை நடத்தவுள்ளனர்.

தமிழ்நாடு சுற்றுலாத் துறை மற்றும் குளோபல் மீடியா பாக்ஸ் இணைந்து நடத்தும் இந்த நிகழ்ச்சி மகாபலிபுரத்தில் நடைபெறுகிறது.

சென்னை மக்களுக்காக நடத்தப்படும் இந்த நிகழிச்சிகளின் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது:

சர்வதேச காத்தாடி விழா

தமிழ்நாட்டு சுற்றுலாத் துறை மற்றும் குளோபல் மீடியா பாக்ஸ் இணைந்து நடத்தும் சர்வதேச காத்தாடி திருவிழா ஆகஸ்ட் 13 முதல் 15 வரை நடக்கவிருக்கிறது. இவ்விழா பட்டம் பறக்கும் கலையில் கற்றுத்தேர்ந்த வீரர்களுடன் (தாய்லாந்து, மலேசியா, அமெரிக்காவைச் சேர்ந்த சிலர் உட்பட) நடைபெறும்.

மேலும், இத்திருவிழாவில் உணவுக் கடைகள், இசை நிகழ்ச்சிகள் மற்றும் குழந்தைகளுக்கான திறமையை வெளிக்கொண்டுவரும் நிகழ்ச்சி ஆகியவையும் நடைபெறும்.

இசை கொண்டாட்டம்

75 முன்னணி பாடகர்களுடன் நடக்கவிருக்கும் நேரடி இசைக் கச்சேரி, நேரு உள்விளையாட்டு அரங்கில், ஆகஸ்ட் 14-ம் தேதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஏராளமான பாடல்களுடன் மக்களை மகிழ்விக்க காத்திருக்கின்றனர். மேலும், இந்திய சுதந்திரத்தின் 75-வது ஆண்டு விழாவைக் கொண்டாடும் வகையில் இந்த ‘ஜன கன மன’ நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

அலெக்ஸின் ஸ்டாண்டப் காமெடி

பிரபலமான நகைச்சுவை நடிகர்களில் ஒருவரான அலெக்சாண்டர் பாபு குடும்பங்களால் கொண்டாடப்படும் பல நகைச்சுவைகளை அளித்திருக்கிறார். அவரது ஸ்டாண்டப் ‘அலெக்ஸ்பீரியன்ஸ்’ என்ற நிகழ்ச்சி ஆகஸ்ட் 13 மற்றும் 14 ஆம் தேதிகளில் அரங்கேறுகிறது.

இவரது முதல் ஸ்டாண்டப் ஆன ‘அலெக்ஸ் இன் வொண்டர்லேண்ட்’ மக்களால் பெரும் வரவேற்பை பெற்றது. அதை அவர் Amazon Prime-இல் வெளியிட்டு இருக்கிறார். அதன்பிறகு வெளிவருகிற ‘அலெக்ஸ்பீரியன்ஸ்’ மற்றொரு தமிழ் இசை கலந்த நகைச்சுவை நிகழ்ச்சியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிகழ்ச்சி  ஸ்ரீ முத்த வெங்கடசுப்பா ராவ் கச்சேரி அரங்கில் நேரடியாக நடத்துகிறார்.

குரல் சுதந்திரம்

“உண்மையான சுதந்திரத்தைக் கண்டறிவதற்கு சுயபரிசோதனை தேவை – காதல், தேவைகள், சுதந்திரம், விரக்தியின் கதைகள் மற்றும் பெருமையின் கதைகள்” – என்று ஏற்பாட்டாளர்கள் இந்த சொற்றொடரின் மூலம் தங்களின் நிகழ்ச்சியை பற்றி விளக்குகின்றனர். அடையாறில், ‘Freedom of Thought, Art, Mind & Body’ என்ற கருப்பொருளுடன் திறந்த மைக் நிகழ்ச்சி நடக்கவிருக்கிறது. ஆகஸ்ட் 13 மாலை 4 மணி முதல் கவிதை மற்றும் கதைகளைப் படிக்க அனைவரும் இந்நிகழ்ச்சிக்கு வருகைதரலாம்.

அனைவரின் கதைகள்

விக்ரம் ஸ்ரீதரின் நாடு முழுவதும் தனது பயணங்கள் மூலம் சேகரித்த அனைத்து விதமான கதைகளை விவரிக்க தயாராக உள்ளார். ஆகஸ்ட் 14 அன்று அடையாறில் இரவு 7 மணி முதல் 8 மணி வரை ‘Fables of Inclusivity: Untold Tales that matter’ நடக்கவிருக்கிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.