வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
வயநாடு : ‘அடுத்தடுத்து விடுமுறை அறிவிக்க வேண்டாம்’ என வயநாடு கலெக்டரிடம் உள்ளூர் மாணவி ஒருவர் வேண்டுகோள் விடுத்தது, சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்தால், மாணவ – மாணவியர் ஜாலியாக கொண்டாடுவர் என்பது பொதுவான நம்பிக்கை. ஆனால், கேரளாவில் ஒரு மாணவி, எல்லாரும் விடுமுறையை கொண்டாட மாட்டார்கள் என்பதை நிரூபித்துள்ளார்.
வயநாட்டில் கனமழை காரணமாக வார விடுமுறைக்குப் பின், நேற்று முன்தினமும், நேற்றும், மாவட்ட நிர்வாகம் உள்ளூர் விடுமுறை அறிவித்ததால், தொடர்ந்து நான்கு நாட்கள் பள்ளி, கல்லுாரிகள் இயங்கவில்லை. இதையடுத்து, சபூரா நவுஷத் என்ற ஆறாம் வகுப்பு மாணவி, ‘இன்றைக்கும் விடுமுறை அறிவித்து விட வேண்டாம்; தொடர்ந்து நான்கு நாட்கள் வீட்டில் இருப்பது கஷ்டமாக இருக்கிறது’ என மாவட்ட கலெக்டர் கீதாவுக்கு ‘இ – மெயில்’ அனுப்பினார்.
உடனே அந்த கலெக்டர் மாணவியை வாழ்த்தியதுடன், அந்த மெயிலை தன் அதிகாரப்பூர்வ சமூக வலைதள கணக்கில் பகிர்ந்தார். இந்நிலையில், அந்த மாணவியின் கோரிக்கை சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement