குமரி முதல் காஷ்மீர் வரை: ராகுல் நடை பயணம் – 2024 மாற்றத்துக்கான முன்னோட்டம்!

முன்னாள் தலைவர் ராகுல்காந்தி செப். 7ஆம்தேதி கன்னியாகுமரியிலிருந்து காஷ்மீர் வரை துவங்கும் நடைபயணம் 2024ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் ஆட்சி மாற்றத்திற்கான முன்னோட்டமாக அமையும்

தெரிவித்தார்.

திருநெல்வேலியில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, “தேர்தல் வெற்றியை மட்டும் முன்னிறுத்தாமல் இந்திய ஜனநாயகத்தை சீர்திருத்தும் வகையில், பாஜக அரசை எதிர்க்கும் நோக்கில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி வரும் செப்டம்பர் 7ஆம்தேதி கன்னியாகுமரியில் நடைப்பயணத்தை துவக்கி காஷ்மீர் வரை செல்கிறார். 148 நாட்கள் 3,500 கி.மீ தூரம் 12 மாநிலங்கள் வழியாக செல்கிறார். இது 2024ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் ஆட்சி மாற்றத்திற்கான முன்னோட்டமாக அமையும்” என்று கூறினார்.

இந்தியா முழுவதும் 75ஆவது சுதந்திரதினத்தை கொண்டாடும் வகையிலும், விலைவாசி, பெட்ரோல், டீசல் விலை உயர்வு, பணவீக்கம் ஆகியவற்றை முன்வைத்து நடைபயணம் தொடங்கியுள்ளோம். இந்தியாவிற்கு சுதந்திரம் பெற்று தந்ததில் காங்கிரசுக்கும், பொது உடைமை கட்சிகளுக்கும் பங்கு உண்டு. மன்மோகன் சிங் பிரதமராக இருந்த போது கச்சா எண்ணெய் விலை 120 டாலராக இருந்தது. பெட்ரோல் லிட்டர் ரூ.70க்கு விற்கப்பட்டது. இன்று கச்சா எண்ணெய் 80 டாலராக உள்ள நிலையில் மோடி அரசு ரூ.100 மேல் பெட்ரோல் விற்கப்படுகிறது.

காங்கிரசுக்கு ஆளத்தெரியும், பாஜவுக்கு பேசத்தான் தெரியும். பீகாரில் நிதிஷ்குமார் ராஜினாமா செய்திருப்பதால் பிரிந்த நண்பர்கள் இணைந்திருக்கிறார்கள், மகாராஷ்டிரா போன்ற சூழல் பீகாரில் ஏற்படாது.

மதசார்பற்ற கட்சிகளுக்கு பீகார் அரசியல் மாற்றம் முதல் வெற்றி. கவர்னர் ரவி, தனது மாளிகையில் வரம்பு மீறி மாநில அரசின் உரிமைகளை பறிக்கும் வகையில் கூட்டங்கள் நடத்துகிறார். இது தவறான செயல் கண்டிக்கத்தக்கது. புலனாய்வுதுறை பின்புலம் உள்ள கவர்னர் தமிழகத்திற்கு தேவையில்லை. மதசார்பற்ற கொள்கையில் உறுதியாக இருப்பவர் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின். மின்கட்டண உயர்வுக்கு காரணம் ஒன்றிய அரசின் உதய்திட்டம்தான்” என்று கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.