சொந்த வீடா..? வாடைகை வீடா..? எது பெஸ்ட்..!

ஒவ்வொருவருக்கும் சொந்த வீடு வாங்க வேண்டும் என்ற கனவு இருந்தாலும் தவணை முறையில் வீடு வாங்கி அதில் சிக்கி கொள்ளக் கூடாது என்ற முன் ஜாக்கிரதை காரணமாக பலர் சொந்த வீடு வாங்காமல் உள்ளனர்.

இந்த நிலையில் இந்திய ரிசர்வ் வங்கி தற்போது வட்டி விகிதத்தை அதிகரித்துள்ளதை அடுத்து வீட்டு லோன் வாங்கியவர்கள் கட்டும் தவணைத் தொகையும் அதிகரித்து உள்ளது. இதனால் சொந்த வீடு வாங்குவதை விட வாடகை வீட்டிலேயே நிரந்தரமாக இருந்து விடலாம் என்று பலர் நினைத்து வருகின்றனர்.

ஆனால் அதே நேரத்தில் வாடகை வீட்டை விட சொந்த வீடு வைத்திருப்பது எப்போதும் சிறந்தது என்று பொருளாதார வல்லுனர்கள் கூறி வருகின்றனர். சொந்த வீடு வாங்குவது நல்லதா? அல்லது வாடகை வீட்டில் இருப்பது நல்லதா? என்பதை தற்போது பார்ப்போம்.

சுதந்திரத்திற்கு முன் உருவாகிய மாபெரும் வர்த்தக 7 சாம்ராஜியங்கள்..!

வாடகை வீடு

வாடகை வீடு

பெருநகரங்கள் அல்லாமல் சிறு நகரங்களில் ஒரு வீட்டை 20,000 ரூபாய்க்கு வாடகைக்கு வீடு கிடைக்கும். அதே நகரத்தில் ரூ.50 லட்சம் மதிப்புள்ள ஒரு பிளாட் வாங்கினால் கிட்டத்தட்ட வாடகை தொகை அளவிலேயே வீட்டுக்கடனின் மாதத்தவணை தொகையை செலுத்தி ஒரு குறிப்பிட்ட வருடங்களில் வீட்டை நமக்கு சொந்தமாக்கிக் கொள்ளலாம்.

வாடகை அதிகரிப்பு

வாடகை அதிகரிப்பு

வீட்டு வாடகை ஆண்டுக்கு 6 சதவீதம் அதிகரித்து வருகிறது என்பதும் அதேபோல் வீட்டுக்கடன் 7 சதவீதம் அதிகரித்து வருகிறது என்பதால் இரண்டுக்கும் பெரிய வித்தியாசம் இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது.

சொந்த வீடு
 

சொந்த வீடு

ஒரு வீட்டை ரூ.50 லட்சத்திற்கு வங்கியில் லோன் வாங்கி விலைக்கு வாங்கினால் சுமார் 27 ரூபாய் மாதத்தவணை கட்ட வேண்டும். வீட்டு வாடகை 20 ஆயிரம் ரூபாயை விட 7000 ரூபாய் மட்டுமே அதிகமாகும் என்பதால் வாடகைக்கு பதிலாக மாதத்தவணையில் வீடு வாங்கினால் 20 முதல் 30 ஆண்டுகளில் நமக்கு வீடு சொந்தமாகி விடும். ஆனால் வாடகை வீட்டில் காலம் காலமாக இருந்தாலும் வீடு நமக்கு சொந்தமானது என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.

முன்கூட்டி பணம் செலுத்துதல்

முன்கூட்டி பணம் செலுத்துதல்

30 ஆண்டுகள் வரை வீட்டுக் கடனை பெற்று ஒரு வீடு வாங்குவதற்கு 85 லட்சம் ரூபாய் தேவை என்றால், 30 வருடங்களில் கொடுக்கும் வாடகை பணத்தை கொண்டு அந்த கடனை திருப்பி செலுத்தி கொள்ளலாம். மேலும் வேறு வகைகளில் மொத்தமாக பணம் கிடைத்தால் கூடுதலாக பணம் செலுத்தி முன்கூட்டியே வீட்டு கடனை முடித்துக் கொள்ளலாம்.

வரிச்சலுகை

வரிச்சலுகை

மேலும் வீட்டுக் கடன் செலுத்துவதற்கும், கடனுக்கான வட்டிக்கும் வரிச் சலுகை உண்டு என்பது குறிப்பிடத்தக்கது. எனவே காலங்காலமாக வாடகைக்கு இருப்பதற்கு பதிலாக ஒரு வீட்டை விலைக்கு வாங்குவது என்பது மிகவும் அவசியமான ஒன்று என்பதை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும்.

புத்திசாலித்தனம்

புத்திசாலித்தனம்

சிறிய நகரங்கள் முதல் பெரிய நகரங்கள் வரை வீட்டின் விலைகள் ஆண்டுக்காண்டு அதிகரித்து வருவதால் நிரந்தரமாக வாடகை வீட்டில் இருப்பதில் இருந்து தப்பித்து கூடிய விரைவில் ஒரு வீடு வாங்குவதுதான் புத்திசாலித்தனம் என்று கூறப்படுகிறது.

பெரு நகரங்கள்

பெரு நகரங்கள்

ஆனால் அதே நேரத்தில் இந்த கால்குலேஷன் பெரு நகரங்களுக்கு பொருந்தாது. சென்னை போன்ற பெருநகரங்களில், நகரத்தில் இருந்து 30 முதல் 50 கிலோ மீட்டர் தள்ளி வீடு வாங்கினால் கூட ஒரு கோடி ரூபாய் வரை தேவைப்படும். ஆனால் அதே இடத்தில் வீட்டு வாடகை செலுத்தினால் 15,000 முதல் 20,000 ருபாய் மட்டுமே ஆகும் என்பதும் குறிப்பிடத்தக்கது. வாடகை தொகைக்கும் தவணை தொகைக்கும் இடையிலான வித்தியாசம் இரு மடங்கு இருப்பதற்கு வாய்ப்பு உள்ளது.

பிரச்சனைகள்

பிரச்சனைகள்

மேலும் நிரந்தர பணியில் இல்லாதவர்கள் திடீரென வேலையிழப்பு உள்ளிட்ட பிரச்சனைகளை சந்தித்தால் மாதத்தவணை கட்ட முடியாமல் வீடு நம் கையை விட்டு போய்விடும் அபாயமும் உண்டு. எனவே வேலையிழப்பு உள்ளிட்ட பிரச்சனை வந்தாலும் சுமார் 6 மாதங்கள் மாதத்தவணையை கட்ட முடியும் என்ற பொருளாதார நிலை இருந்தால் மட்டுமே சொந்த வீடு குறித்து யோசிக்க வேண்டும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Rent House or Own House: Rs 60 lakh profit on buying Rs 50 lakh flat than renting for Rs 20,000 per month

Rent House or Own House: Rs 60 lakh profit on buying Rs 50 lakh flat than renting for Rs 20,000 per month | சொந்த வீடா..? வாடைகை வீடா..? எது பெஸ்ட்..!

Story first published: Wednesday, August 10, 2022, 8:49 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.