புதுடெல்லி: அரசுத் துறை மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கு தேவையான சேவை மற்றும் பொருட்களை கொள்முதல் செய்ய மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை சார்பில் ‘அரசு இ-மார்க்கெட்’ (ஜிஇஎம்) என்ற தனி இணையதளம் வடிவமைக்கப்பட்டு கடந்த 2016-ல் பயன்பாட்டுக்கு வந்தது.
ஜிஇஎம் இணையதளத்தில் கூட்டுறவு சங்கங்களும் இணையும் நடைமுறைகளை மத்திய கூட்டுறவுத் துறை அமைச்சர் அமித் ஷா நேற்று தொடங்கி வைத்தார். அவர் பேசும்போது,“300-க்கும் மேற்பட்ட கூட்டுறவு நிறுவனங்கள் போட்டி விலையில் பொருட்கள் மற்றும் சேவையை பெறுவதற்காக ஜிஇஎம் இணையதளத்தில் வாங்குபவர்களாக இணைக்கப்பட்டுள்ளன. கூட்டுறவு சங்கங்கள் தங்களை விற்பனையாளராகவும் ஜிஇஎம் இணையதளத்தில் பதிவு செய்துகொள்ள வேண்டும்.
கூட்டுறவு சங்கங்கள் தங்களின் தேர்தல் நடைமுறை, ஆட்கள் தேர்வு மற்றும் கொள்முதலில் வெளிப்படைத் தன்மையை கொண்டுவர வேண்டும்” என்றார்.