மிரட்டும் சீனா! அடிபணிகிறதா தைவான்? வெளியான முக்கிய தகவல்


சீனாவுக்கு ஒருபோதும் அடிபணிய மாட்டோம் என தைவான் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

தைவானை, நம் அண்டை நாடான சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. அமெரிக்க சபாநாயகர் நான்சி பெலோசி சமீபத்தில் தைவானுக்கு வந்தார்.
இதனால் ஆத்திரம் அடைந்த சீனா, நான்சி வந்து சென்ற மறுநாளில் இருந்து, தென் சீன கடலில், தைவான் ஜலசந்தியில் போர் பயிற்சியை துவக்கியது.

இந்நிலையில், தைவான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜோசப் வூ நேற்று கூறுகையில், தைவான் ஜலசந்தியில், போர் பயிற்சி என்ற பெயரில் சீனா எங்களை அச்சுறுத்தி வருகிறது.

மிரட்டும் சீனா! அடிபணிகிறதா தைவான்? வெளியான முக்கிய தகவல் | Taiwan S Foreign Minister Speaks On China Threats

JOHNSON LAI/AP

தைவானுக்கு மற்ற நாடுகள் உதவி செய்வதை தடுக்க திட்டமிடும் சீனா, கிழக்கு மற்றும் தென் சீன கடல் பகுதியை, தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயற்சிக்கிறது.

தைவானை கைப்பற்ற தீவிரமாக செயல்பட்டு வரும் சீனாவின் முயற்சி பலிக்காது. நாங்கள் யாருக்கும் அடிபணிய மாட்டோம். தைவான் ராணுவத்தின் தயார் நிலையை சோதனை செய்யும் பயிற்சிகள் துவக்கப்பட்டுவிட்டன என தெரிவித்துள்ளார்.

மிரட்டும் சீனா! அடிபணிகிறதா தைவான்? வெளியான முக்கிய தகவல் | Taiwan S Foreign Minister Speaks On China Threats

cnn



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.