இன்று முதல் நடைமுறைக்கு வரும் கட்டண அதிகரிப்பு! மின் அலகுகளுக்கான கட்டணம் தொடர்பில் தெளிவான விபரம்


நாட்டில் இன்றைய தினம் முதல் நடைமுறைக்கு வரும் வகையில் மின்சார கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், அலகுகளுக்கான கட்டணங்கள் மற்றும் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள சலுகைகள் உள்ளிட்ட விரிவான தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது தொடர்பில் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க கூறுகையில்,

இன்று முதல் மின்சார கட்டணம் 75 சதவீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

8 வருடங்களின் பின்னர் மின் கட்டணம் அதிகரிக்கப்படுகிறது. நாட்டில் 78 இலட்சம் வாடிக்கையாளர்கள், மின்சாரத்தை பெறுகின்றனர்.

அவர்களில் 67 இலட்சம் பேர் வீட்டுப்பாவணைக்காகவும், ஏனைய 11 இலட்சம் பேர் வர்த்தகம் உள்ளிட்ட பொது செயற்பாடுகளுக்காகவும் மின்சாரத்தை பெறுகின்றனர்.

வீட்டுப் பாவனைக்காக மாதாந்தம் மின்சாரத்தை பெறுவோரில் 48 இலட்சம் பேர், 90 அலகுகளுக்கும் குறைவான மின்சாரத்தை பயன்படுத்துகின்றனர்.

இன்று முதல் நடைமுறைக்கு வரும் கட்டண அதிகரிப்பு! மின் அலகுகளுக்கான கட்டணம் தொடர்பில் தெளிவான விபரம் | Electricity Bill Hike In Sri Lanka

திருத்தப்பட்டுள்ள மின் கட்டணம் தொடர்பான தெளிவான விபரம்

இந்த நிலையில், திருத்தப்பட்டுள்ள மின் கட்டணத்துக்கு அமைய, 1 முதல் 30 வரையான அலகுகளில், ஒரு அலகிற்கு 2 ரூபா 50 சதமாக காணப்பட்ட கட்டணம், 8 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

பாரியளவில் அதிகரிக்கப்படும் மின்சார கட்டணம்! நாளை முதல் நடைமுறை 

31 முதல் 60 வரையான அலகுகளில், ஒரு அலகிற்கு 4 ரூபா 85 சதமாக காணப்பட்ட ஒரு அலகிற்கான கட்டணம், 16 ரூபாவாகவும், 61 முதல் 90 வரையான அலகுகளில், ஒரு அலகிற்கு 7 ரூபா 85 சதமாக காணப்பட்ட ஒரு அலகிற்கான கட்டணம், 16 ரூபாவாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

91 முதல் 180 வரையான அலகுகளில், 27 ரூபாவாக காணப்பட்ட ஒரு அலகிற்கான கட்டணம், 50 ரூபாவாக அதிகரிக்கப்படுகிறது.

இன்று முதல் நடைமுறைக்கு வரும் கட்டண அதிகரிப்பு! மின் அலகுகளுக்கான கட்டணம் தொடர்பில் தெளிவான விபரம் | Electricity Bill Hike In Sri Lanka

வழங்கப்படும் மானியம்

இதேவேளை, 30 அலகுகளுக்கும் குறைவான பாவனையைக் கொண்ட பிரிவினருக்கு மொத்த செலவில் 25 சதவீதம் அறவிடப்படுவதுடன், அவர்களுக்கு 75 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது.

31 முதல் 60 அலகுகளுக்கு உட்பட்ட பாவனையாளர்களுக்கு, மொத்த செலவில் 40 சதவீதம் அறவிடப்படுவதுடன் அவர்களுக்கு 60 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது.

சலுகையுடன் நடைமுறைக்கு வரவுள்ள மின்சார கட்டண அதிகரிப்பு! வெளியானது அறிவிப்பு 

61 முதல் 90 அலகுகளுக்கு உட்பட்ட பாவனையாளர்களுக்கு, 50 சதவீத கட்டணம் மட்டுமே அறவிடப்படுகிறது. அந்த வகையில் 50 சதவீத மானியமும் வழங்கப்படுகிறது.

அதன்படி, 75 சதவீத மின்சார பாவனையாளர்களுக்கு இன்னும் மானியம் வழங்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார். 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.