வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
மலப்புரம்: கேரளாவில் தாயும், மகனும் அரசு பணியாளர் தேர்வில் ஒன்றாக படித்து தேர்ச்சி பெற்றிருப்பது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
கேரள மாநிலம், மலப்புரத்தை அடுத்த அரிகோடு என்னும் பகுதியை சேர்ந்தவர் பிந்து (42 ), இவரது மகன் விவேக் (24). பிந்து கடந்த 10 ஆண்டுகளாக அங்கன்வாடி ஊழியராக பணிபுரிந்து வந்துள்ளார். விவேக் கல்லூரி படிப்பு முடித்ததும், தாயும், மகனும் சேர்ந்து அரசு தேர்வுகள் எழுத விரும்பியுள்ளனர். இதனையடுத்து இருவரும் இணைந்து பயிற்சி மையத்திற்கு சென்று படித்து வந்த நிலையில், தற்போது அரசு பணியாளர் தேர்வில் இருவரும் ஒன்றாக தேர்ச்சி அடைந்துள்ளனர்.
இது குறித்து பிந்துவின் மகன் விவேக் கூறுகையில், ‛நானும் அம்மாவும் பயிற்சி வகுப்புக்கு ஒன்றாக சென்றோம். அப்பா எங்களுக்கு பயிற்சி பெறுவதற்கான எல்லா வசதிகளையும் ஏற்பாடு செய்தார். எங்களது ஆசிரியர்களும் நிறைய ஊக்கம் அளித்தனர். இருவரும் ஒன்றாக படித்தோம், ஆனால் ஒன்றாக தேர்ச்சி பெறுவோம் என நினைக்கவில்லை. இருவரும் தற்போது மகிழ்ச்சியாக இருக்கிறோம்’ என்றார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement