உலகில் ஒவ்வொரு ஆண்டும் மக்கள் தொகை அதிகரித்து வருகிறது என்பதுதான் மக்கள் தொகை குறித்த கணக்கெடுப்பு தகவல்கள் கூறுகின்றன.
இந்தியா, சீனா, ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் மக்கள் தொகை மிக வேகமாக வளர்ந்து வந்தாலும் ஒரு சில நாடுகளில் மக்கள் தொகை குறைந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
உலகில் உள்ள 20 நாடுகளில் மக்கள் தொகை மிகவும் குறைந்து வருவதாக வெளியாகி உள்ள தகவல் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் மக்கள் தொகை குறைந்து வரும் நாடுகள் குறித்து தற்போது பார்ப்போம்.
சொந்த வீடா..? வாடைகை வீடா..? எது பெஸ்ட்..!
உலக மக்கள் தொகை
1900 ஆண்டுகளில் இருந்து உலக மக்கள் தொகை மேல் நோக்கி வருகிறது என்பது மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்த தகவல்களில் இருந்து தெரிய வருகிறது. குறிப்பாக சீனா, இந்தியா ஆகிய நாடுகளில் மக்கள் தொகை மிக அதிகமாக வளர்ந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆப்பிரிக்க நாடுகள்
சீனா, இந்தியாவை அடுத்து ஆப்பிரிக்க நாடுகளில் மக்கள்தொகை அதிகமாகி வருகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறி வருகின்றனர். 2019ஆம் ஆண்டு நிலவரப்படி நைஜீரியாவில் உள்ள ஒரு பெண் சராசரியாக ஆறு குழந்தைகள் பெற்றுக் கொண்டார் என்று தெரிய வந்துள்ளது.
குறையும் மக்கள் தொகை
ஆனால் அதே நேரத்தில் சில நாடுகளில் மக்கள் தொகை குறைந்து வருகிறது என்பது ஆச்சரியமான தகவலாக உள்ளது. உலகின் 20 நாடுகளில் ஒவ்வொரு ஆண்டும் மக்கள் தொகை குறைந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன்படி 2020ஆம் ஆண்டிலிருந்து 2050ஆம் ஆண்டு வரை ஐக்கிய நாட்டு சபையின் தரவுகளின்படி 10 நாடுகளில் மக்கள் தொகை மிக அதிகமாக குறையும் என்று வரிசைப்படுத்தப்பட்டு உள்ளது. அந்த 10 நாடுகளும் எதிர்பார்க்கப்படும் மக்கள் தொகை குறைவு சதவிகித தகவல்களும் இதோ:
1. பல்கேரியா 22.5%
2. லிதுவேனியா 22.1%
3. லாட்வியா 21.6%
4. உக்ரைன் 19.5%
5. செர்பியா 18.9%
6. போஸ்னியா மற்றும் ஹெர்சகோவினா 18.2%
7. குரோஷியா 18.0%
8. மால்டோவா 16.7%
9. ஜப்பான் 16.3%
10. அல்பேனியா 15.8%
மக்கள் தொகை குறைய காரணம்
மேற்கண்ட நாடுகளில் மக்கள் தொகை குறைவதற்கு ஒரு சில குறிப்பிட்ட காரணங்கள் உள்ளது. மக்கள் தொகை குறைவுக்கு முதல் காரணம் பிறப்பு விகிதங்கள் குறைவதுதான் என பீட்டர்சன் இன்ஸ்டிடியூட் ஃபார் இன்டர்நேஷனல் எகனாமிக்ஸ் (PIIE) என்ற அமைப்பு எடுத்த ஆய்வு முடிவுகள் தெளிவாக கூறுகிறது. சோவியத் யூனியனின் வீழ்ச்சிக்கு பிறகு மக்கள் தொகை மேற்கண்ட நாடுகளில் குறைந்துள்ளது என்றும் இந்த ஆய்வு தெரிவித்துள்ளது.
பிறப்பு விகிதம்
1988 ஆம் ஆண்டில் மேற்கண்ட நாடுகளில் ஒரு பெண்ணுக்கு சராசரியாக 2.1 குழந்தைகள் பிறந்த நிலையில் 1998ஆம் ஆண்டில் அதாவது 10 ஆண்டுகளில் அது கிட்டத்தட்ட பாதியாக அதாவது 1.2 ஆக குறைந்துள்ளது. ஒரு சில நாடுகளில் பிறப்பு விகிதங்கள் சற்று அதிக இருந்தாலும் இறப்பு விகிதம் அதிகமாக இருப்பதால் மக்கள் தொகை குறைந்து வருவதாகவும் ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
புலம்பெயர்வு
மேலும் ஒரு சில நாடுகளில் மக்கள் தங்கள் நாட்டை விட்டு வேறு நாடுகளுக்கு புலம்பெயர்ந்து செல்வதும் மக்கள் தொகை குறைவுக்கு காரணமாக உள்ளன. 2006 மற்றும் 2007ஆம் ஆண்டுகளில் ஐரோப்பிய ஒன்றியத்தின் எல்லை விரிவாக்க பணிகளை தொடர்ந்து கிழக்கு ஆப்பிரிக்காவில் இருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு ஏராளமான புலம்பெயர்வு ஏற்பட்டது. 2016ஆம் ஆண்டில் 6.3 மில்லியன் பேர் கிழக்கு ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் இருந்து புலம்பெயர்ந்து உள்ளதாக அறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது.
ஜப்பான்
மக்கள் தொகை குறைந்து வரும் நாடுகளில் ஒன்றான ஜப்பான் நாட்டை பொறுத்தவரை 1970ஆம் ஆண்டு முதல் பிறப்பு விகிதம் தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருவதாக கூறப்படுகிறது. 2010ஆம் ஆண்டு ஒட்டுமொத்த ஜப்பான் மக்கள் தொகை மக்கள் தொகை மிகவும் குறைய தொடங்கியது. 2020 ஆம் ஆண்டில் ஜப்பானில் 811,604 குழந்தைகள் பிறந்ததாகவும் ஆனால் அதே நேரத்தில் 1.44 மில்லியன் மக்கள் இறந்ததாகவும் ஆய்வு முடிவுகள் தெரிவித்துள்ளன. ஜப்பானில் குழந்தை பிறப்பு விகிதங்கள் குறைந்து, இறப்பு விகிதம் அதிகரித்ததன் காரணமாக அந்நாட்டு மக்களின் சராசரி வயது 49 என இருந்து வருகிறது.
கவர்ச்சியான திட்டங்கள்
ஜப்பானிய அரசாங்கம் அதிக குழந்தைகளை பெறுவதற்கு கவர்ச்சிகரமான பல திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது. ஆனால் அதன் மூலம் பெரிய பயன் எதுவும் கிடைத்ததாக தெரியவில்லை. ஜப்பானின் குழந்தை பிறக்கும் சதவிகிதம் குறைவதற்கு சரியான காரணத்தை கண்டுபிடித்து அதற்கு தீர்வு காண வேண்டும் என்று அங்குள்ள சமூக ஆர்வலர்கள் தெரிவித்து வருகின்றனர்.
கியூபா
ஜப்பானை அடுத்து மக்கள் தொகை குறையும் நாடுகளில் ஒன்றான கியுபாவில் உள்ள பெண்கள் சராசரியாக 1.7 குழந்தைகள் மட்டுமே பெற்று கொள்கின்றனர் என்றும், கியூபாவின் கருவுறுதல் விகிதம் லத்தீன் அமெரிக்க பிராந்தியத்தில் மிக குறைவு என்றும் கூறப்படுகிறது. அதேபோல் மெக்ஸிகோவில் உள்ள பெண்கள் சராசரியாக 2.2 குழந்தைகளையும் பராகுவே பெண்கள் 2.5 குழந்தைகளையும், குவாத்தமாலா நாட்டின் பெண்கள் 3 குழந்தைகளையும் சராசரியாக பெற்று கொள்கின்றனர்.
The 20 Countries With the Fastest Declining Populations!
The 20 Countries With the Fastest Declining Populations! | மளமளவென சரியும் மக்கள் தொகை.. குழப்பத்தில் 20 நாடுகள்..!