சமந்தாவை நேரில் சந்தித்தால் என்ன செய்வீர்கள்? – நாக சைதன்யா ருசிகர பதில்

கையில் உள்ள டாட்டூவை மாற்றப் போகிறீர்களா என்று கேட்கப்பட்ட கேள்விக்கு “அப்படியேதும் எண்ணம் இல்லை” என்று கூறினார் நாக சைதன்யா.

நடிகை சமந்தாவும், நடிகர் நாக சைதன்யாவும் கடந்த 2017-ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். சுமார் 4 ஆண்டுகள் வரை ஒன்றாக சேர்ந்து வாழ்ந்த நிலையில் திடீரென இருவரும், ‘இனி நாங்கள் கணவன்- மனைவி அல்ல, பிரிகிறோம்’ என்று கடந்த ஆண்டு அக்டோபரில் தனித்தனியாக அறிவித்தனர். அது முதல் இவர்களது பிரிவுக்கு பல காரணங்கள் கூறப்பட்டு வந்தாலும், எதனால் இவர்கள் பிரிந்தனர் என யாரும் கூறவில்லை.  இதனிடையே, தற்போது ஆமீர்கான் நடித்துள்ள ‘லால் சிங் சத்தா’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள நாக சைதன்யா. அதற்கான பிரமோஷன் வேலையில் ஈடுபட்டுள்ளார். அப்போது பேட்டி ஒன்றில் அவரிடம், ‘சமந்தாவை நேரில் சந்தித்தால் என்ன செய்வீர்கள்?” என்று கேட்கப்பட்டது.  அதற்கு பதிலளித்த நாக சைதன்யா, “ஹாய் சொல்லி கட்டிப்பிடிப்பேன்” என்று கூலாக சொன்னார்.

image

மேலும் தன் கையில் இருக்கும் டாட்டூ குறித்து பேசிய நாக சைதன்யா,  “என் கைகளில் உள்ள போன்றே டாட்டூ வரைந்திருக்கும் என் ரசிகர்களை நான் கவனித்திருக்கேன். அதில் இருப்பது எனது திருமண நாள். என் திருமண நாளை யாரும் டாட்டூவாக வரைய வேண்டாம். சில விஷயங்கள் மாறலாம், நானே இந்த டாட்டூவை மாற்றலாம். அதனால் நீங்கள் டாட்டூ போட விரும்பினால், என் கைகளில் உள்ளது போன்றே வேண்டும் என்ற தேர்வை எடுக்காதீர்கள்” என்று கூறியுள்ளார். கையில் உள்ள டாட்டூவை மாற்றப் போகிறீர்களா என்று கேட்கப்பட்ட கேள்விக்கு, “அப்படியேதும் எண்ணம் இல்லை” என்று கூறியுள்ளார்.

முன்னதாக, சமீபத்தில் பாலிவுட் இயக்குநர் கரண் ஜோஹர் நடத்திவரும் ‘காஃபி வித் கரண்’ நிகழ்ச்சியில் பங்கு பெற்ற நடிகை சமந்தா தனது விவாகரத்து தொடர்பாக பேசினார். அதில், “கூர்மையான பொருட்களை மறைத்து வைத்துள்ள ஒரு அறையில் இருவரையும் அடைத்து வைத்தால் எப்படியிருக்கும் அது போன்ற உணர்வு அப்போது இருந்தது. இப்போதும்கூட அந்த உணர்வு உள்ளது. ஆனால் எதிர்காலத்தில் இந்த நிலை மாறி இணக்கம் வரலாம்” என்று பதில் கொடுத்தார் சமந்தா.

இதையும் படிக்க: ‘அடுத்த வருடம் நிச்சயம்’ கைதி2 படம் குறித்து நடிகர் கார்த்தி கொடுத்த மாஸ் அப்டேட்!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.