திடீரென சரிந்து விழுந்து உயிரிழந்த சவுதி அரேபிய தூதர்: பரபரப்பு காட்சிகள்!


  • அரபு-ஆப்பிரிக்க மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய சவுதி அரேபிய தூதர் முகமது ஃபஹத் அல்-கஹ்தானி திடீர் மரணம்.
  • எகிப்திய ஜனாதிபதி அமைதியான மனிதர் என புகழாரம்.

எகிப்தில் நடைபெற்ற அரபு-ஆப்பிரிக்க மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய சவுதி அரேபிய தூதர் முகமது ஃபஹத் அல்-கஹ்தானி திடீரென சரிந்து விழுந்து உயிரிழந்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆகஸ்ட் 8ம் திகதியான திங்களன்று எகிப்தில் வைத்து நடைபெற்ற அரபு-ஆப்பிரிக்க மாநாட்டில் எகிப்திய ஜனாதிபதி அப்தெல் ஃபத்தா அல்-சிசியின் சாதனையை ஆதரித்து உரையாற்றிக் கொண்டு இருந்த போது திடிரென சரிந்து விழுந்து முகமது ஃபஹத் அல்-கஹ்தானி உயிரிழந்துள்ளார்.

இந்த உரையில் எகிப்திய ஜனாதிபதி அப்தெல் ஃபத்தா அல்-சிசியை மனிதகுலத்தின் டீன் மற்றும் அமைதியான மனிதர் என அல்-கஹ்தானி விவரித்து இருந்தார்.

அல்-கஹ்தானி தனது மனைவி ஆயிஷா அல்-ஜாப்ரியுடன் மாநாட்டில் கலந்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளன.

கூடுதல் செய்திகளுக்கு: ஈரானின் செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தியது ரஷ்யா: உளவு பார்ப்பதற்கான திட்டம் என அச்சம்!

திடீரென சரிந்து விழுந்து உயிரிழந்த சவுதி அரேபிய தூதர்: பரபரப்பு காட்சிகள்! | Saudi Diplomat Al Qahtani Died Arab In Egypt

இந்தநிலையில், மேடையில் உரையாற்றிக் கொண்டு இருந்த அல்-கஹ்தானி சரிந்து விழுந்து உயிரிழந்தது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வைரல் ஆகிவருகிறது. 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.