கொரோனா தொற்றுநோய் மற்றும் ரஷ்யா உக்ரைன் போர் காரணமாக, உலகின் பெரும்பாலான நாடுகள் மெதுவாக பொருளாதார மந்தநிலையை நோக்கி நகர்கின்றன. அதன் விளைவு நீண்ட நேரம் தெரியும். பெரும்பாலான நிறுவனங்கள் செலவுகளை மிச்சப்படுத்த ஊழியர்களை பணிநீக்கம் செய்கின்றன, பல நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களின் சம்பளத்தை குறைத்துள்ளன. ஆனால் இத்தனைக்கும் நடுவில் இந்த இரண்டு விதமான அதிர்ச்சி எதையும் கொடுக்காமல் சம்பளத்தை உயர்த்திக் கொண்டே இருக்கும் ஒரு நிறுவனம் உள்ளது என்றால் ஆச்சர்யமகா உள்ளது இல்லையா. ஆம், அந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஆண்டுக்கு குறைந்தபட்சம் $80 ஆயிரம் அதாவது ஆண்டுக்கு சுமார் ரூ.63,65,008 சம்பளமாக தனது ஊழியர்களுக்கு வழங்கி வருகிறார். மற்ற நிறுவனங்களும் இதுபோன்ற நடவடிக்கைகளை எடுத்து சரியான சம்பளம் வழங்க வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தலைமை செயல் அதிகாரியின் அற்புதமான செயல்
ஊழியர்களுக்கு அதிக சம்பளம் கொடுத்து தலைப்புச் செய்தியில் இடம்பிடித்த இந்த நிறுவனம், கிராவிட்டி பேமென்ட்ஸ் (Gravity Payments). அதன் தலைமை நிர்வாக அதிகாரி டான் பிரைஸ் ஆவார். ஒவ்வொரு பணியாளருக்கும் குறைந்தபட்சம் 80 ஆயிரம் டாலர்கள் பேக்கேஜ் கொடுப்பதாக டான் பிரைஸ் கூறினார். இது தொலைதூர வேலை மற்றும் நெகிழ்வான வேலைக்கான ஆப்ஷன்களையும் கொடுக்கிறது. இது தவிர, பெற்றோர்களை காண விடுப்புகளும், நிதி உதவியும் கொடுக்கப்படுகிறது.
மேலும் படிக்க | 5 ரூபாய்க்கு டீ விற்பனை செய்யும் 80 வயது மூதாட்டி – Viral News
நிறுவனத்தின் வேண்டுகோள்
டான் பிரைஸ் ட்விட்டரில் மற்ற நிறுவனங்களும் தங்கள் ஊழியர்களுக்கும் இதைச் செய்ய வேண்டும் என்று பதிவிட்டுள்ளார். நமது தொழில் வளர்ச்சியில், பயணத்தில் பணியாளர்கள் நம்முடன் இருப்பதை மதிக்க வேண்டும். “எனது நிறுவனம் சம்பளப் பேக்கேஜில் மட்டும் கவனம் செலுத்தாமல், ஊழியர்களின் மற்ற வசதிகளையும் கவனித்துக்கொள்கிறது. இங்கு சம்பளம் குறைந்தது 80 ஆயிரம் டாலர்களில் இருந்து தொடங்குகிறது. அவர்கள் எங்கிருந்தும் வேலை செய்யவும் சுதந்திரம் உண்டு.மேலும் பெற்றோர் விடுப்பில் இருப்பவர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறையை நிறுவனம் வழங்குகிறது. ஒரு வேலைக்கு 300க்கும் மேற்பட்ட விண்ணப்பதாரர்கள் கிடைப்பதாக கூறுகிறார். இன்றைய கால கட்டத்தில், மோசமான சூழலில் யாரும் வேலை செய்ய விரும்பவில்லை என்கிறார். எனவே ஒவ்வொரு நிறுவனமும் ஊழியர்களுக்கு உரிய சம்பளம் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.
My company pays an $80k min wage, lets people work wherever they want, has full benefits, paid parental leave, etc.
We get over 300 applicants per job.
“No one wants to work” is a hell of a way of saying “companies won’t pay workers a fair wage and treat them with respect.”
— Dan Price (@DanPriceSeattle) August 8, 2022
மேலும் படிக்க | Viral News: ₹3,419 கோடி மின்சார பில் கொடுத்த ஷாக்; மயங்கி விழுந்த வீட்டு உரிமையாளர்
ஆறு ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்ட முடிவு
ஆறு ஆண்டுகளுக்கு முன்பு தனது நிறுவனத்தில் பணிபுரியும் ஒவ்வொரு ஊழியரின் சம்பளத்தையும் ஆண்டுக்கு 70 ஆயிரம் டாலர்களாக உயர்த்தியதை சமூக ஊடகங்களில் அவர் தெரிவித்துள்ளார், அது இப்போது 80 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. சம்பளம் உயர்த்தப்பட்டதில் இருந்து, நிறுவனத்தின் வருவாயும் மூன்று மடங்காக உயர்ந்துள்ளது என்றார்.
மேலும் படிக்க | Viral News: கேட்ட பார்த்தாலே பயமா இருக்கே… இது உலகின் கொலைகார தோட்டம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ