ஆகஸ்ட் மாதம் 19ஆம் திகதி முதல் தொடர்ச்சியாக மண்ணெண்ணையை விநியோகிக்க எதிர்பார்த்துள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர இன்று (10) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
பாராளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி எழுப்பிய வாய்மூலக் கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும், கடந்த நான்கு வாரங்களாக மீனவர்களுக்கு தேவையான மண்ணெண்ணையை விநியோகிக்க முடியவில்லை. இருப்பினும், தெரிவு செய்யப்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு விநியோகிப்பதற்கு நடவடிக்கை எடுத்ததாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
கடந்த காலங்களில் சுத்திகரிப்பு நிலையம் செயற்பாட்டில் இல்லாததனால் மண்ணெண்ணையை தயாரிக்க முடியவில்லை.
இம்மாதம் 15ஆம் திகதி மசகு எண்ணெய் ஏற்றிய கப்பல் ஒன்று நாட்டை வந்தடைய உள்ளது. எதிர்வரும் 29ஆம் திகதி இரண்டாவது கப்பலும் வந்தடைய உள்ளது. எனவே, எதிர்வரும் 15ஆம் திகதி முதல் சுத்திகரிப்பு நிலையத்தை செயற்படுத்த எதிர்பார்த்திருப்பதாகவும் அமைச்சர் சுட்டிக் காட்டினார்.
அதன்படி, இம்மாதம் 19ஆம் திகதி முதல் தொடர்ந்தும் மண்ணெண்ணையை விநியோகிக்க நடவடிக்கை எடுத்துள்ளதுடன், மண்ணெண்ணெய் விலையில் திருத்தம் மேற்கொள்ள எதிர்பார்த்திருப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.