ஹரியானாவின் பானிபட் 900 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட இரண்டாம் தலைமுறை (2ஜி) எத்தனால் ஆலையைப் பிரதமர் நரேந்திர மோடி புதன்கிழமை வீடியோ கான்பரன்சிங் திறந்து வைக்கிறார்.
இந்த ஆலை மூலம் யின் அர்ப்பணிப்பு, நாட்டில் பயோ எரிபொருட்களின் உற்பத்தி மற்றும் பயன்பாட்டை அதிகரிக்கப் பல ஆண்டுகளாக அரசாங்கம் எடுத்துள்ள நீண்ட தொடர் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாகும்.
இந்தியன் ஆயில் எடுத்த அதிரடி முடிவு.. நெகிழ்ந்து போன இலங்கை..!
எனர்ஜி துறை
இந்தியாவின் எனர்ஜி துறையை மலிவானதாகவும், எளிதாக அனுக்கூடியதாகவும், திறமையான மற்றும் நிலையான பிரிவாக மாற்ற வேண்டும் என்ற பிரதமர் மோடியின் நீண்ட காலக் கனவு திட்டத்தின் முக்கியமான மையில் கல் எனப் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன்
2ஜி எத்தனால் ஆலை இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (IOCL) மூலம் 900 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளது மற்றும் இப்புதிய தொழிற்சாலை பானிபட் இந்தியன் ஆயில் சுத்திகரிப்பு ஆலைக்கு அருகில் அமைந்துள்ளது.
2 லட்சம் டன் அரிசி வைக்கோல்
2ஜி எத்தனால் ஆலை அதிநவீன உள்நாட்டுத் தொழில்நுட்பம் கொண்டு உருவாக்கப்பட்டு உள்ள நிலையில், ஆண்டுதோறும் சுமார் 2 லட்சம் டன் அரிசி வைக்கோலை (பராலி) பயன்படுத்தி, ஆண்டுதோறும் சுமார் 3 கோடி லிட்டர் எத்தனால் உற்பத்தி செய்ய முடியும்.
waste to wealth திட்டம்
இந்தியாவின் கழிவு-செல்வம் அதாவது waste to wealth முயற்சிகளில் புதிய அத்தியாயத்தை இந்த 2ஜி எத்தனால் ஆலை முக்கியப் பங்கு வகிக்கும் எனக் கூறப்படுகிறது. விவசாயப் பயிர் கிழிவுகளுக்கு இதன் மூலம் இறுதிப் பயன்பாட்டை உருவாக்குவது விவசாயிகளுக்குப் புதிய வாய்ப்பை அளிப்பதோடு, அவர்களுக்குக் கூடுதல் வருமானம் ஈட்டும் வாய்ப்பையும் வழங்கும்.
வேலைவாய்ப்பு
இந்தத் திட்டம் மூலம் தொழிற்சாலையில் ஈடுபட்டுள்ள மக்களுக்கு நேரடி வேலைவாய்ப்பை வழங்குவது மட்டும் அல்லாமல், அரிசி வைக்கோல் வெட்டுதல், கையாளுதல், சேமிப்பு போன்றவற்றுக்கு விநியோகச் சங்கிலியில் மறைமுக வேலைவாய்ப்பு உருவாக வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.
கார்பன் டை ஆக்சைடு வாயு
அரிசி வைக்கோலை எரிப்பதைக் குறைப்பதன் மூலம், ஆண்டுக்கு சுமார் 3 லட்சம் டன் கார்பன் டை ஆக்சைடு வெளியேற்றத்தைத் தடுக்க முடியும். இது இந்திய சாலைகளில் ஆண்டுதோறும் கிட்டத்தட்ட 63,000 கார்களை மாற்றுவதற்குச் சமம் என்றும் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
Indian Oil 2G ethanol plant built with 900 crore in Panipat; PM Modi to inaugurate
Indian Oil 2G ethanol plant built with 900 crore in Panipat; PM Modi to inaugurate இந்தியன் ஆயில்-ன் 2ஜி எத்தனால் ஆலையைத் திறக்கும் மோடி.. ரூ.900 கோடி முதலீடு..!