விஜயநகரா : விஜயநகரா ஹொஸ்பேட்டில் அமைக்கப்பட்டு வரும், நாட்டின் 123 மீட்டர் உயரமான கொடி கம்பத்தில் வரும் 15ம் தேதி தேசிய கொடி ஏற்றப்படுகிறது. கொடி கம்பம் அமைக்க காரணமான அமைச்சர் ஆனந்த்சிங், கொடி ஏற்ற வேண்டுமென மாவட்ட மக்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.கர்நாடகாவின் மேலும் ஒரு மைல் கல்லாக, நாட்டிலேயே மிக உயரமான தேசிய கம்பம், ஹொஸ்பேட்டில் உள்ள புனித் ராஜ் குமார் விளையாட்டு மைதானத்தில், சுற்றுலா துறை சார்பில் ஆறு கோடி ரூபாய் செலவில், 123 அடி உயரத்தில் அமைக்கும் பணி இம்மாதம் 6ம் தேதி இரவு 8:00 மணிக்கு துவங்கியது.
இதற்காக, 120 அடி அகலம், 80 அடி உயரத்தில் தேசிய கொடியை தயாரிக்கும் பணி, மஹாராஷ்ராடிவை சேர்ந்த நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.கொடி கம்பம் கட்டட கமிட்டி உறுப்பினர் ஒருவர் கூறுகையில், ‘ஹம்பி, துங்கபத்ரா அணையை அடுத்து, இந்த கொடி கம்பம், சுற்றுலா பயணியரை வெகுவாக ஈர்க்கும். உலகம் முழுதுமிருந்து சுற்றுலா பயணியர் வருகின்றனர். ஹொஸ்பேட்டின் எந்த பகுதியில் நின்று பார்த்தாலும், தேசிய கொடி தெரியும்,’ என்றார்.இந்நிலையில், தேசிய கொடியை அமைக்கும் திட்டத்துக்கு வித்திட்டவர் அமைச்சர் ஆனந்த் சிங். இவருக்கு கொப்பால் மாவட்ட பொறுப்பு அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதால், சுதந்திர தினத்தன்று, அங்கு செல்லவுள்ளார்.விஜயநகரா மாவட்ட பொறுப்பு அமைச்சராக உள்ள சசிகலா ஜொல்லே, 123 மீட்டர் கொடி கம்பத்தில் தேசிய கொடி ஏற்றவுள்ளார். ஆனால் இம்மாவட்ட மக்களோ, இங்கு கொடி கம்பம் அமைக்க காரணமான அமைச்சர் ஆனந்த் சிங் தான் ஏற்ற வேண்டும் என தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக. அரசு ஆலோசித்து வருவதாக தகவல்கள் கூறுகின்றன.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement