விலை ரூ.25 – தபால் துறை மூலம் ஆன்லைனில் தேசியக் கொடி ஆர்டர் செய்வது எப்படி?

புதுடெல்லி: நாட்டின் 75-வது சுதந்திர விழாவை கொண்டாடும் விதமாக வீடுதோறும் தேசியக் கொடியை ஏற்றுமாறு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார். இந்தச் சூழலில் இந்திய தபால் துறை மூலம் ஆன்லைனில் தேசியக் கொடியை ஆர்டர் செய்து பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தங்கள் வீட்டில் கொடியை ஏற்ற விரும்பும் மக்கள் ஆன்லைன் வழியே இந்திய அஞ்சல் துறை மூலம் மூவர்ணக் கொடியை ஆர்டர் செய்து, டெலிவரி தொகைக்கான கட்டணம் கூட இல்லாமல் பெற முடியும். அது எப்படி என்பதை பார்ப்போம்.

20X30 இன்ச் அளவு கொண்ட தேசிய கொடியின் விலை ரூ.25 என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு நபர் ஆன்லைன் வழியாக அதிகபட்சம் 5 கொடிகள் வரை ஆர்டர் செய்து பெறலாம்.

ஆன்லைனில் ஆர்டர் செய்வது எப்படி?

  • இதற்கு epostoffice.gov.in என்ற இணையதளத்தை அணுக வேண்டியுள்ளது.
  • அதில் Products செக்னில், நேஷனல் ஃபிளாக் என்ற லிங்கை க்ளிக் செய்ய வேண்டும்.
  • பயனராக பதிவு செய்தோ அல்லது கெஸ்டாகவும் தேசியக் கொடியை பெறலாம்.
  • மொபைல் நம்பர், விலாசம் உள்ளிட்ட விவரங்களை கொடுத்து தேசிய கொடிக்கான கட்டணத்தை செலுத்த வேண்டும்.
  • அதை செய்தால் ஆகஸ்ட் 15-ம் தேதிக்குள் தேசிய கொடி பயனர்களின் வீடு தேடி வந்து இந்திய அஞ்சல் துறை ஊழியர்கள் டெலிவரி செய்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.