உலகிலேயே பணக்கார குடும்பங்கள் இவங்க தான்.. ஒரே ஒரு இந்திய குடும்பம்.. யார் அது!

உலகப் பணக்கார்கள் என்றாலே நமக்கு சிலரின் பெயர் தான் நினைவுக்கு வரும். இதில் பில்கேட்ஸ் உள்ளிட்ட சில பெயர்கள் இருக்காமல் இருக்காது. எனினும் குடும்ப வணிகத்தினை செய்து வரும் நிதி ரீதியாக அதிக சொத்து மதிப்பினை கொண்ட உலகின் டாப் 10 குடும்பங்கள் எது? அவர்களின் சொத்து மதிப்பு எவ்வளவு?

அப்படிப்பட்ட வெற்றிகரமான தொழிலதிபர்கள் யார்? அவர்களின் வணிகம் என்ன? வாருங்கள் பார்க்கலாம்.

குழந்தை, வேலை எனது அற்புதமான இரட்டையர்கள்…. எடெல்வீஸ் MD ராதிகா குப்தா!

வால்டன் குடும்பம்

வால்டன் குடும்பம்

முதலிடத்தில் இருப்பது வால்டன் குடும்பம் தான். இவர்களின் நிறுவனத்தின் பெயர் வால்மார்ட். இவர்களின் தோராயமான சொத்து மதிப்பு 212 பில்லியன் டாலராகும். அமெரிக்காவின் பணக்கார குடும்பமான இது, சில்லறை விற்பனையில் ஈடுபட்டு வரும் ஒரு நிறுனமாகும். வால்மார்ட் 1962ல் சாம் வால்டனால் நிறுவப்பட்டது. தற்போது மிகப்பெரிய வருவாயினை ஈட்டி வரும் ஒரு நிறுவனமாக உள்ளது. இது 524 பில்லியன் வருவாயுடன், 2.3 மில்லியன் கூட்டாளிகளுடன் இணைந்து செயல்பட்டு வருகின்றது. இது 10,500 சில்லறை கடைகளை செயல்படுத்தி வரும் நிலையில், அதில் 4742 ஸ்டோர்கள் அமெரிக்காவில் மட்டும் உள்ளது.

மார்ஸ் குடும்பம்

மார்ஸ் குடும்பம்

மார்ஸ் குடும்பத்தின் சொத்து மதிப்பு 142 பில்லியன் டாலராகும். இது மார்ஸ் நிறுவனத்தினை நடத்தி வருகின்றது. இது பல தலைமுறை தாண்டிய ஓரு வணிக நிறுவனமாகும். பல வகையான கேண்டிகளை தயாரித்து வருகின்றது. 2017ல் விசிஏ – நிறுவனத்தினை 9.1 பில்லியன் டாலருக்கு வாங்கிய நிலையில், அதன் வணிகம் இன்னும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

கோச் குடும்பம்
 

கோச் குடும்பம்

கோச் குடும்பத்தின் சொத்து மதிப்பு 124 பில்லியன் டாலராகும். இந்த குடும்பம் கோச் இண்டஸ்ட்ரீஸ் – ஐ நடத்தி வருகின்றது. சார்லஸ் கோச் தனது தந்தையால் நிறுவப்பட்ட எண்ணெய் வணிகத்தில் பெரும் வளர்ச்சி கண்டுள்ளது. இன்று அவர் அரசியலால் பிரபலமானவராக இருந்தாலும் , அவர்களின் வணிகமும் கோச் குடும்பத்திற்கு ஒரு பெரிய அங்கீகாரமாக இருந்தது.

ஹெர்ம்ஸ் குடும்பம்

ஹெர்ம்ஸ் குடும்பம்

ஹெர்ம்ஸ் குடும்பத்தின் சொத்து மதிப்பு 112 பில்லியன் டாலராகும். இவர்களின் நிறுவனம் ஹெர்மேஸ்.

ஹெர்ம்ஸ் குடும்பத்தின் பிரெஞ்ச் பேஷன் ஹவுஸ் மற்றும் ஆடம்பர பொருட்கள் என பலவும் உலகின் பிரபலமானவை. இது ஆரம்ப காலத்தில் ஆடம்பர ஆடைகளை வடிவமைத்து வந்த நிலையில், இன்று கூடைபந்து வீரர்களுக்கும் ஆடைகளை உற்பத்தி செய்கின்றது.

அல் சவுத்

அல் சவுத்

அல் சவுத் குடும்பத்தின் சொத்து மதிப்பு 100 பில்லியன் டாலர்களாகும். இது சவுதி ராயல் பேமலி என்ற நிறுவத்தினை இயக்கி வருகின்றது.

உலகின் மிகப்பெரிய நிறுவனங்களில் ஒன்றான சவுதி அராம்கோவுடன் வணிக உறவினை கொண்டுள்ள இந்த நிறுவனம், அதன் மூலம் செல்வத்தை ஈட்டி வருகின்றது. இதன் உண்மையான சொத்து மதிப்பினை கணிப்பது கடினம் என்று கூறப்படும் நிலையில், இந்த குடும்பம் பல்வேறு வகையான வணிக ஒப்பந்தங்களையும் செய்து வருகின்றது.

அம்பானி குடும்பம்

அம்பானி குடும்பம்

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தினை நடத்தி வரும் முகேஷ் அம்பானி குடும்பத்தின் சொத்து மதிப்பு 94 பில்லியன் டாலராகும். இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ள ஒரே ஆசிய நிறுவனமாகும். குறிப்பாக இந்திய நிறுவனம் ஆகும். இந்தியாவினை சேர்ந்த இந்த நிறுவனம் எண்ணெய் முதல் டிஜிட்டல் வரையில் பல்வேறு வணிகங்களை செய்து வருகின்றது. இதன் தலைவர் முகேஷ் அம்பானி ஆவார். போர்ப்ஸ் பில்லியனர்கள் பட்டியலில் 10வது இடத்தில் உள்ளார்.

வெர்தைமர் குடும்பம்

வெர்தைமர் குடும்பம்

வெர்தைமர் குடும்பத்தின் சொத்து மதிப்பு 62 பில்லியன் டாலராகும். இது சேனல் என்ற நிறுவனத்தினை நடத்தி வருகின்றது. இது பேஷன் ஆடைகள், வாசனை திரவியங்கள் என பல வகையான ஆடம்பர பொருட்கள் வணிகத்தினை செய்து வருகின்றனர். இரு சகோதரர்களான கெர்ஹார்ட் வெதைமர் அலைன் இருவரும் இணைந்து தனது தாத்தாவின் வணிகத்தினை நடத்தி வருகின்றனர். இவர்களும் போர்ப்ஸ் பில்லியனர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

ஜான்சன் குடும்பம்

ஜான்சன் குடும்பம்

ஜான்சன் குடும்பத்தின் சொத்து மதிப்பு 61 பில்லியன் டாலராகும். இது ஃபிடிலிட்டி இன்வெஸ்ட்மெண்ட்ஸ் நிறுவனத்தினை நடத்தி வருகின்றனர். இது எட்வர்ட் சி ஜான்சன் ஆல் நிறுவப்பட்ட ஒரு நிறுவனமாகும். பல லட்சம் மக்களுக்கு முதலீட்டு சேவைகளை வழங்கும் ஒரு நிறுவனமாகும். இந்த நிறுவனத்தினை தற்போது ஜான்சனின் பேத்தி அபிகெயில் நடத்தி வருகின்றார். இவர் போர்ப்ஸ் பில்லியனர்கள் பட்டியலில் 75வது இடத்தில் உள்ளார்.

தாம்சன் குடும்பம்

தாம்சன் குடும்பம்

தாம்சன் குடும்பத்தின் சொத்து மதிப்பு 61 பில்லியன் டாலராகும். இந்த குடும்பம் தாம்சன் ராய்ட்டர்ஸ் நிறுவனத்தினை நடத்தி வருகின்றது. 1930களில் ராய் தாம்சன் கனடாவில் ஒரு வானொலி நிலையத்தினை தொடங்கினார். அதன் பின்னர் செய்தித் தாள்கள் என வளர்ந்தது. ராய் தாம்சனின் பேரன் டேவிட் தாம்சன் தற்போது இதன் தலைவராக உள்ளார். இவர் போர்ப்ஸ் பட்டியலில் 26 இடத்தில் உள்ளார்.

போஹ்ரிங்கர், வான் பாம்பாக் குடும்பம்

போஹ்ரிங்கர், வான் பாம்பாக் குடும்பம்

இவர்களின் சொத்து மதிப்பு 59 பில்லியன் டாலராகும். இவர்களின் நிறுவனம் போஹ்ரிங்கர் இங்கல்ஹெய்ம்.

இது ஒரு ஜெர்மனியினை சேர்ந்த பார்மா நிறுவனமாகும். இந்த நிறுவனம் 130 ஆண்டுகளுக்கு மேலாக வரலாற்றினை கொண்டுள்ளது. பல தலைமுறைகள் கண்டுள்ள இந்த நிறுவனம் இன்னும் வலுவான வளர்ச்சி கண்டு வரும் ஒரு நிறுவனமாக உள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: top 10 டாப் 10

English summary

Top 10 wealthiest families and their net worth

Top 10 wealthiest families and their net worth/உலகிலேயே பணக்கார குடும்பங்கள் இவங்க தான்.. ஒரே ஒரு இந்திய குடும்பம்.. யார் அது!

Story first published: Wednesday, August 10, 2022, 15:52 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.