இலங்கையிலிருந்து கனடாவுக்கு புலம்பெயர்ந்த பெண் பட்ட கஷ்டங்கள்… இன்று அவரது பேத்தி மேற்கொண்டுள்ள நல்ல முயற்சி


*இலங்கைப் பெண்ணொருவர் ஆசிரியராக இருந்த நிலையிலும் கனடாவில் நிலையான வேலை கிடைக்காமல் கஷ்டப்பட்டிருக்கிறார்.

*இன்று அவரது பேத்தி புலம்பெயர்ந்தோர் மற்றும் அகதிகளுக்கு உதவும் வகையில் ஒரு நல்ல நடவடிக்கையைத் துவங்கியுள்ளார்.

இலங்கையிலிருந்து கனடாவுக்கு புலம்பெயர்ந்த ஒரு தம்பதியின் மகளான ஆஷ்னா (Aashna Nadarajah), புலம்பெயர்ந்தோர் மற்றும் அகதிகளுக்கு உதவும் வகையில், குறிப்பாக பெண்களுக்கு வருவாய் கிடைக்கும் வகையில் நல்ல முயற்சி ஒன்றைத் துவங்கியுள்ளார். 

ஆஷ்னாவின் பாட்டியார் 1980களில் இலங்கையிலிருந்து கனடாவுக்கு புலம்பெயர்ந்திருக்கிறார். அவர் முதுகலைப் பட்டம் பெற்றிருந்தும், ஏற்கனவே ஒரு ஆசிரியையாக இருந்தும்கூட, கனடாவில் நிலையான ஒரு வேலை கிடைக்க மிகவும் கஷ்டப்பட்டிருக்கிறார்.

இலங்கையிலிருந்து கனடாவுக்கு புலம்பெயர்ந்த பெண் பட்ட கஷ்டங்கள்... இன்று அவரது பேத்தி மேற்கொண்டுள்ள நல்ல முயற்சி | Migrant Women S Hardships  

image – gofundme

மனத்திருப்தி இல்லாமல் ஏதேதோ வேலைகள் பார்க்கவேண்டிய நிலைமை ஏற்பட்டிருக்கிறது அவருக்கு.

தனது பாட்டியின் கதையை பல முறை கேட்டிருந்த ஆஷ்னாவுக்கு, தானும் புலம்பெயர்ந்தோர் மற்றும் அகதிகளுக்கு உதவும் வகையில் ஏதாவது செய்யவேண்டும் என்ற எண்ணம் உருவாகியுள்ளது.

இலங்கையிலிருந்து கனடாவுக்கு புலம்பெயர்ந்த பெண் பட்ட கஷ்டங்கள்... இன்று அவரது பேத்தி மேற்கொண்டுள்ள நல்ல முயற்சி | Migrant Women S Hardships

image – annarborfamily

தற்போது Second Helpings என்ற பெயரில் தொண்டு நிறுவனம் ஒன்றைத் துவக்கியுள்ளார் ஆஷ்னா. அந்த அமைப்பு, புலம்பெயர்ந்த மற்றும் அகதிப் பெண்களுக்கு, அவர்கள் தங்களுக்குத் தெரிந்த உணவுப்பொருட்களைத் தயாரித்து விற்பனை செய்து அதன் மூலம் வருவாய் ஈட்ட உதவுகிறது.

இத்தனைக்கும் ஆஷ்னா இன்னமும் கல்வி பயிலும் ஒரு மாணவிதான். அவர் Huron High School என்ற பள்ளியில் பயின்று வருகிறார்.
 

மேலதிக விவரங்களுக்கு…https://www.michigandaily.com/news/ann-arbor/huron-high-school-student-launches-refugee-and-immigrant-assistance-non-profit-second-helpings-at-ann-arbor-distilling-company/



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.