IRCTC.. தூள் கிளப்பிய நிகரலாபம்.. முதலீட்டாளர்கள் செம ஹேப்பி..!

இந்தியன் ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகமான ஐஆர்சிடிசி, பொதுத்துறையை சேர்ந்த ஒரு நிறுவனமாகும். இந்த நிறுவனத்தின் நிகரலாபம் ஜூன் காலாண்டில் 198% அதிகரித்து, 245.52 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.

இது கடந்த ஆண்டில் இதே காலாண்டில் 82.52 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

இதே இந்த நிறுவனத்தின் செயல்பாட்டின் மூலம் கிடைத்த வருவாய் விகிதமானது 250.34 அதிகரித்து, 852.59 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டில் 243.36 கோடி ரூபாயாக இருந்தது.

55% சரிவை கண்ட ஐஆர்சிடிசி பங்குகள்ஸ்ரீ. வாங்குவதற்கு இது சரியான தருணமா?

வருவாய்

வருவாய்

இந்த நிறுவனத்தின் மொத்த வருவாய் விகிதம் 877 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டில் 258 கோடி ரூபாயாக இருந்தது. இதே செலவினங்கள் 548 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டில் 147 கோடி ரூபாயாக இருந்தது.

எபிடா விகிதம்

எபிடா விகிதம்

இந்த நிறுவனத்தின் எபிடா விகிதம் (வட்டி, வரி, தேய்மானத்திற்கு முந்தைய விகிதம்) முதல் காலாண்டில் 320.9 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டில் 111.5 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

கேட்டரிங் சேவை & இணைய டிக்கெட் விற்பனை
 

கேட்டரிங் சேவை & இணைய டிக்கெட் விற்பனை

ஐஆர்சிடிசி-யின் வருவாய் விகிதம் பெரும் வளர்ச்சியினை கண்டுள்ளது. குறிப்பாக அதன் கேட்டரிங் சேவையில் 352 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டில் 56.7 கோடி ரூபாயாக இருந்தது.

இணைய மூலம் விற்பனை செய்யும் டிக்கெட் மூலம் 301.6 கோடி ரூபாயாக வருவாயினை கண்டுள்ளது.

ரயில் நீர் & சுற்றுலா & ஸ்டேட் தீர்த்தா

ரயில் நீர் & சுற்றுலா & ஸ்டேட் தீர்த்தா

இதே ரயில் நீர் மூலம் 83.6 கோடி ரூபாயாகவும், இதே சுற்றுலா துறை மூலம் 81.9 கோடி ரூபாயாகவும், ஸ்டேட் தீர்த்தா மூலம் 33.2 கோடி ரூபாயாகவும் வருவாயினை ஈட்டியுள்ளது.

ரயில்வே-க்கு எதுவும் அளிக்கப்படவில்லை.

ரயில்வே-க்கு எதுவும் அளிக்கப்படவில்லை.

கேட்டரிங் ஒப்பந்தங்கள் தொற்று நோய் காரணமாக பூஜ்ஜியமாக இருந்தது. ரயில்வே துறைக்கு அளிக்க வேண்டிய பங்கு எதுவும் அளிக்கப்படவில்லை என்று இந்த நிறுவனம் பி எஸ் இ-க்கு தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவித்துள்ளது. இதற்கிடையில் இன்றைய பங்கு சந்தை முடிவில் இப்பங்கின் விலையானது 2.41% அதிகரித்து, 673.10 ரூபாயாக முடிவடைந்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

IRCTC q1 updates: Net profit jumped nearly 200% to Rs/246 crore in june quarter

IRCTC q1 updates: Net profit jumped nearly 200% to Rs/246 crore in june quarter/IIRCTC.. தூள் கிளப்பிய நிகரலாபம்.. முதலீட்டாளர்கள் செம ஹேப்பி..!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.