காமன்வெல்த்தில் ஒலித்த யுவன் பாடல்
இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடந்து வந்த காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் நிறைவடைந்தன. நிறைவு விழாவில் நடந்த கலை நிகழ்ச்சியில் பாலா இயக்கத்தில் ஆர்யா, விஷால் நடித்து, யுவன் இசையில் வெளியான ‛அவன் இவன்' படத்திலிருந்து ‛தியா தியா டோல்' பாடல் இசைக்கப்பட்டது. இதற்கு கலைஞர்கள் நடனமாடினர். நமது நாட்டு கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் விதமான இந்த பாடலும், நடனமும் அமைந்தது. இதை ரசிகர்கள் வைரலாக்கினர். காமன்வெல்த்தில் ஒலித்த யுவன் பாடல் என ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.