பெங்களூரு, : சாம்ராஜ்பேட் சட்டசபை தொகுதியில் மறுவரையறை செய்யப்பட்ட வார்டுகளை ரத்து செய்து, புதிய வார்டுகளை உருவாக்கும்படி, ஒரு வழக்கறிஞர் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.பெங்களூரு மாநகராட்சி வார்டுகளின் எண்ணிக்கை, 198லிருந்து, 243 ஆக உயர்த்தி ஜூலை 14ம் தேதி கர்நாடக அரசு அரசாணை பிறப்பித்தது.
இதில், சாம்ராஜ்பேட் சட்டசபை தொகுதியில் மறுவரையறை செய்யப்பட்ட வார்டுகளை ரத்து செய்து, புதிய வார்டுகளை உருவாக்க அரசுக்கு உத்தரவிடும்படி, வழக்கறிஞர் இஸ்மாயில் ஜபி உல்லா என்பவர், உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.சமீபத்தில் வழக்கை விசாரித்த நீதிபதி, கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து, அங்கேயே தீர்த்து கொள்ளும்படி உத்தரவிட்டது.இதையடுத்து, உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். மனுவில், நகர அபிவிருத்தி துறை கூடுதல் தலைமை செயலர், பெங்களூரு நகர மாவட்ட கலெக்டர், மாநகராட்சி தலைமை கமிஷனர், கர்நாடக தேர்தல் ஆணையம் ஆகியோரை பிரதிவாதிகளாக குறிப்பிட்டுள்ளார்.இவ்வழக்கு எப்போது விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படும் என்று நேற்று வரை உயர்நீதிமன்றம் விசாரணை பட்டியலில் குறிப்பிடவில்லை.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement