நெரிசலை தவிர்க்க வேளாங்கண்ணிக்கு சிறப்பு ரயில்| Dinamalar

பெங்களூரு : ‘சுதந்திர தினம், கிருஷ்ண ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி, வேளாங்கண்ணி திருவிழாவை ஒட்டி, பயணியர் வசதிக்காக சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்’ என தென்மேற்கு ரயில்வே அறிவித்துள்ளது.வெளியிட்டுள்ள அறிக்கை:தமிழகம் வேளாங்கண்ணிக்கு ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் பயணியர் செல்ல உள்ளனர்.

இந்நேரத்தில் நெரிசலை தவிர்க்க, சிறப்பு ரயில் சேவை துவக்க திட்டமிடப்பட்டுள்ளது.* ரயில் எண் 07357: வரும் 27 ம் தேதி முதல் சனிக்கிழமை தோறும் வாஸ்கோடகாமாவில் இருந்து காலை 9:00 மணிக்கு புறப்பட்டு, ஞாயிற்றுக்கிழமை மதியம் 12:25 மணிக்கு வேளாங்கண்ணி சென்றடையும்.மறுமார்க்கத்தில் எண் 07358: வரும் 28 ம் தேதி முதல் ஞாயிற்றுக்கிழமை தோறும் வேளாங்கண்ணியில் இருந்து இரவு 11:45 மணிக்கு புறப்பட்டு, 30ம் தேதி அதிகாலை 4:00 மணிக்கு வாஸ்கோடகாமா சென்றடையும்.* எண் 07359: செப்., 2ம் தேதி வெள்ளி தோறும் வாஸ்கோடகாமாவில் இருந்து மதியம் 2:30 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் இரவு 7:10 மணிக்கு வேளாங்கண்ணி சென்றடையும்.மறுமார்க்கத்தில் எண் 07360: செப்., 4ம் தேதி ஞாயிறு தோறும் வேளாங்கண்ணியில் இருந்து காலை 9:15 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 10:00 மணிக்கு வாஸ்கோடகாமா சென்றடையும்.* எண் 07361: செப்., 6ம் தேதி வாஸ்கோடாகாமாவில் இருந்து செவ்வாய் தோறும் இரவு 7:05 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் இரவு 11:30 மணிக்கு வேளாங்கண்ணி சென்றடையும்.எண் 07362: செப்., 8 ம் தேதி வியாழன் தோறும் வேளாங்கண்ணியில் இருந்து காலை 9:15 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 10:00 மணிக்கு வாஸ்கோடகாமா சென்றடையும்.* எண்: 07371: வரும் 12ம் தேதி யஷ்வந்த்பூரில் இருந்து இரவு 9:30 மணிக்கு அதி விரைவு ரயில் புறப்பட்டு, மறுநாள் காலை 8:25 மணிக்கு பெலகாவி சென்றடையும்.மறுமார்க்கத்தில் எண் 07372: வரும் 15ம் தேதி பெலகாவியில் இருந்து இரவு 9:20 மணிக்கு அதி விரைவு ரயில் புறப்பட்டு, மறுநாள் காலை 8:20 மணிக்கு யஷ்வந்த்பூர் வந்தடையும்.* எண் 07373: அதிவிரைவு ரயில், வரும் 18 ம் தேதி யஷ்வந்த்பூரில் இருந்து இரவு 9:30 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 8:25 மணிக்கு பெலகாவி சென்றடையும்.எண் 07374: அதிவிரைவு ரயில், வரும் 21ம் தேதி பெலகாவியில் இருந்து இரவு 9:20 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 8:20 மணிக்கு யஷ்வந்த்பூர் சென்றடையும்.இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.