ஈரான் எடுத்த அதிரடி.. உலக நாடுகள் கவலை.. ஏன்.. என்ன ஆச்சு!

ஈரான் கிரிப்டோகரன்சியை பயன்படுத்தி தனது முதல் அதிகாரப்பூர்வ இறக்குமதி ஆர்டரை செய்துள்ளது.

இது குறித்து Tasnim நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், இது அமெரிக்காவின் பொருளாதார தடைகளை தவிர்க்க ஈரான் அரசுக்கு உதவும் என தெரிவித்துள்ளது.

கிரிப்டோகரன்சியை பயன்படுத்தி செய்த இறக்குமதி ஆர்டரின் மதிப்பு 10 மில்லியன் டாலராகும். இது டாலரின் ஆதிக்கத்தின் மத்தியில், பிற நாடுகளுடன் டிஜிட்டல் கரன்சியின் மூலம் வணிகம் செய்ய உதவும்.

லட்டு மாதிரி 64 லட்சம்.. வரி சலுகை உடன் மிஸ் பண்ணிடாதீங்க..!

டிஜிட்டல் சொத்துக்கள் மூலம் வணிகம்

டிஜிட்டல் சொத்துக்கள் மூலம் வணிகம்

இது போன்ற டிஜிட்டல் சொத்துக்கள் மூலம் பிற நாடுகளுடன் வணிகம் செய்ய அனுமதிப்பது இதுவே முதல் முறையாகும். எனினும் எந்த கிரிப்டோகரன்சியினை பயன்படுத்திக் கொள்ளலாம் என்பது குறித்தான அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.

எந்த கரன்சி?

எந்த கரன்சி?

செப்டம்பர் இறுதிக்குள் கிரிப்டோகரன்சிகள் மற்ற வெளி நாட்டு வர்த்தகத்திலும் பயன்படுத்தப்படும் என்றும் அந்த நாட்டு அமைச்சக அதிகாரி ஒருவர் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் பதவியில் இருந்தபோது ஈரானின் எண்ணெய், வங்கிகள், கப்பல் துறைகள் உள்ளிட்ட பலவற்றின் மீதும் தடை விதித்தது. இதனால் ஈரான் பொருளாதார ரீதியாக பெரும் பின்னடைவை சந்தித்தது. சொல்லப்போனால் மற்ற நாடுகளையும் ஈரானிடன் எண்ணெய் வாங்காமல் தவிர்த்தது.

பெரும் பிரச்சனை
 

பெரும் பிரச்சனை

இதுவரையில் தெக்ரான் இன்றும் கிரிப்டோகரன்சியை ஏற்றுக் கொள்ளாத மிகப்பெரிய நாடாக இருந்து வந்தது. அமெரிக்காவின் தடையால் பெரும் பிரச்சனையை எதிர்கொண்டு வரும் பிரச்சனைக்கு மத்தியில், இது ஈரானின் பொருளாதாரத்தினை மேம்படுத்த உதவும்.

பொருளாதாரத்தில் வளர்ச்சி

பொருளாதாரத்தில் வளர்ச்சி

கடந்த ஆண்டில் நடத்தப்பட்ட ஆய்வில் ஈரானில் பெரும் அளவிலான கிரிப்டோகரன்சி பரிவர்த்தனை செய்வது கண்டறியப்பட்டது. இது ஈரானின் பொருளாதார வளர்ச்சிக்கு வழிவகுக்கும். இது ஈரானுக்கு மில்லியன் கணக்கான டாலர்களை பெற வழிவகுக்கும். இது பொருளாதாரத் தடைகளின் தாக்கத்தைக் குறைக்கவும் பயன்படும்.

அமெரிக்கா வெளியேற்றம்

அமெரிக்கா வெளியேற்றம்

கடந்த 2015ல் ஈரான் அணு சக்தி ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா வெளியேறியது. இதற்கிடையில் தான் அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே பிரச்சனை ஆரம்பித்தது. இது பின்னர் மிகப்பெரிய வர்த்தக தடையையும் விதித்தது.

எது எப்படியோ ஈரானின் இந்த முடிவு மற்ற உலக நாடுகளையும் அனுமதிக்க வழிவகுக்கலாம். அதோடு எந்த பொருளாதார தடையும் ஈரானை பாதிக்காது. இதனால் டாலரின் ஆதிக்கத்தினை குறைக்க வழிவகுக்கலாம். 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: iran ஈரான்

English summary

Iran has placed its first official import order using cryptocurrency.

Iran has placed its first official import order using cryptocurrency./ஈரான் எடுத்த அதிரடி.. உலக நாடுகள் கவலை.. ஏன்.. என்ன ஆச்சு!

Story first published: Wednesday, August 10, 2022, 20:08 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.