''Outstanding Achievement Award'' விருதை பெறுகிறது ’அறமுடைத்த கொம்பு’

நெல்லையை சேர்ந்த இளம் இயக்குனரின் முதல் படைப்பான “அறமுடைத்த கொம்பு” திரைப்படம் , சர்வதேச அரங்கில் சிறந்த திரைப்படத்திற்கான விருதை இரண்டாவது முறையாக பெற்றுள்ளது. 

பெருமாள்புரம் பகுதியைச் சேர்ந்த ஜாக்சன்ராஜ் என்ற இயக்குனர் தனது சொந்த மாவட்டமான நெல்லையைச் சேர்ந்த மக்கள் மற்றும் திரைக்கலைஞர்களைக் கொண்டு  “அறமுடைத்த கொம்பு” என்ற பெயரில் திரைப்படத்தை உருவாக்கியுள்ளார்.

கடந்த மாதம் சிங்கப்பூரில் நடந்த World film carnival விழாவில் Narrative feature பிரிவில் “அறமுடைத்த கொம்பு” திரைப்படத்திற்கு சிறந்த திரைப்படத்திற்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதே போல மேற்கு வங்கத்தில் நடைபெற்ற தாகூர் இன்டர்நேஷனல் ஃபிலிம் ஃபெஸ்டிவலில் “அறமுடைத்த கொம்பு” திரைப்படத்திற்கு அவுட் ஸ்டாண்டிங் அச்சீவ்மென்ட் அவார்டு பிரிவில் தற்போது விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.