மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் அரசு பேருந்து , ஆட்டோ மற்றும் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த டெம்போ வேன் மீது அடுத்தடுத்து மோதும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.
குர்லா பகுதியில் உள்ள சந்தோஷ் நகரில் இந்த விபத்து நடைபெற்றுள்ளது. பேருந்தின் பிரேக் சரியாக வேலை செய்யாததால், ஒட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்து ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த சம்பவத்தில் 4பேர் காயம் அடைந்த நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.