அக்னிபாத் திட்டம்.. பெண்களுக்கு வெளியான சூப்பர் அறிவிப்பு.. நவம்பர் 1 முதல்..!

ராணுவ காவல் துறையினருக்கான பொதுப் பணிப் பிரிவின் கீழ் பெண் பணியாளர்களுக்கான அக்னிவீர் ஆட்சேர்ப்பு, நவம்பர் 1 – 3 முதல் கர்நாடகாவில் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கர்நாடகா, கேரளா மற்றும் யூனியன் பிரதேசமான லட்சத்தீவு மற்றும் மாஹே உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த தன்னார்வ பெண்களுக்கு, பெங்களூர் ஆட்சேர்ப்பு அலுவலகம் மானெக்ஷா பரேட் மைதானத்தில் ஆட்சேர்ப்பு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

சென்னை ராணுவ வீராங்கனை.. 27 ஆண்டுகளுக்கு பின் அதே இடத்தில் நடந்த நெகிழ்ச்சியான தருணம்..!

அறிவிப்பு

அறிவிப்பு

ராணுவத்தில் ராணுவ போலீஸ் படையில் அக்னிவீர் ஜெனரல் டியூட்டியில் சேர்வதற்காக இந்த ஆட்சேர்ப்பு நடத்தப்படவுள்ளது. இதற்காக வயது தகுதி, கல்வித் தகுதி, மற்றும் பிற விவரங்களை கடந்த ஆகஸ்ட் 7ம் தேதி பெங்களூரு தலைமையக ஆள்சேர்ப்பு மண்டலத்தால் வெளியிடப்பட்ட அறிவிப்பில் கொடுக்கப்பட்டது.

தகுதிகள் என்ன?

தகுதிகள் என்ன?

அதன்படி, ராணுவப் பெண் அக்னிவீர் ஆட்சேர்ப்பு 2022க்கான வயது வரம்பு 17.5 – 23 ஆண்டுகள். ஆகஸ்ட் 10 முதல் இதற்கான ஆன்லைன் பதிவு தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதே செப்டம்பர் 7 வரை ஆன்லைன் பதிவு திறந்திருக்கும் என்று அது மேலும் தெரிவித்துள்ளது.

எப்படி விண்ணப்பிப்பது?
 

எப்படி விண்ணப்பிப்பது?

இதற்காக https://www.joinindianarmy.nic.in/Authentication.aspx என்ற இணையதளத்தில் விண்ணப்பதாரர்கள் ஆன்லைனில் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும். வெற்றிகரமான பதிவு செய்யப்பட்ட பிறகு அட்மிட் கார்டு அவர்கள் பதிவு செய்த மெயில் ஐடிக்கு அக்டோபர் 12 மற்றும் 13க்குள் அனுப்பப்படும்.

அக்னிவீர் திட்டம் எதற்காக?

அக்னிவீர் திட்டம் எதற்காக?

கடந்த சில மாதங்களுக்காக மத்திய அரசின் இந்த திட்டத்தின் கீழ் ராணுவம், கப்பல், விமான படை என மூன்று பிரிவுகளிலும் பணியமர்த்தப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. 4 ஆண்டுகால ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தப்படும் இவர்கள், 17 1/2 வயது முதல் 23 வயதுள்ள விண்ணப்பதாரர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது.

4 ஆண்டு பணிக்கு பிறகு

4 ஆண்டு பணிக்கு பிறகு

இந்த அக்னி வீரர்களில் 25% பேர் வழக்கமான பணிகளுக்கு (Regular cadre) கீழ் கொண்டு வரப்படுவார்கள். இந்த 4 ஆண்டுகால பணிக்கு பிறகு 10 லட்சம் ரூபாய் சேவ நிதி பேக்கேஜ் வழங்கப்படும். இது வட்டியுடன் சேர்த்து 11.71 லட்சம் ரூபாயாக கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

 சம்பளம் எவ்வளவு?

சம்பளம் எவ்வளவு?

முதல் ஆண்டில் சம்பளம் – ரூ.30,000, பிடித்தம் போக ரூ.21,000 கிடைக்கும். இதில் அக்னி வீர் கார்ப்பஸ்-க்காக 9000 ரூபாய் செலுத்தப்படும்.

இரண்டாம் ஆண்டில் 33,000 ரூபாய் சம்பளம், கையில் 23,100 ரூபாய் கிடைக்கும். இதில் 9,900 ரூபாய் அக்னிவீர் கார்ப்பஸிக்கு செல்லும்.

3ம் ஆண்டில் 36,500 ரூபாய் சம்பளம் கிடைக்கும். இதில் 25,580 ரூபாய் சம்பளம் கையிலும், 10,950 ரூபாய் அக்னி வீர் கார்ப்பஸ் ஆகவும் செல்லும்.

4வது ஆண்டில் 40,000 ரூபாய் சம்பளம் ஆகும். இதில் கையில் 28,000 ரூபாய் சம்பளமும், 12,000 ரூபாய் அக்னிவீர் கார்ப்பஸ்-க்கும் செல்லும் என அறிவிக்கப்பட்டது.

இந்த அக்னி வீர்ஸ், 4 வருட பணிக்கு பின்பு ரெகுலர் பணிக்கும் விண்ணப்பிக்கலாம்.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Agnipath scheme: agniveer recruitment for women candidates from November 1,2022

Agnipath scheme: agniveer recruitment for women candidates from November 1,2022/அக்னிபாத் திட்டம்.. பெண்களுக்கு வெளியான சூப்பர் அறிவிப்பு.. நவம்பர் 1 முதல்..!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.