Petrol and Diesel Price: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.
Tamil News Latest Updates
தலைமை நீதிபதி நியமனம்
உச்சநீதிமன்றத்தின் 49-ஆவது தலைமை நீதிபதியாக யு.யு.லலித் புதன்கிழமை நியமனம் செய்யப்பட்டார். அந்த நியமன உத்தரவில் குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு கையொப்பமிட்டார். தற்போதைய தலைமை நீதிபதி என்.வி.ரமணா வரும் 26-ஆம் தேதி ஓய்வு பெற்ற பிறகு, புதிய தலைமை நீதிபதியாக யு.யு.லலித் ஆகஸ்ட் 27-ஆம் தேதி பதவியேற்பார்.
சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கு
சாத்தான்குளத்தைச் சோ்ந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோர் போலீஸ் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு தாக்கியதில் அடுத்தடுத்து உயிரிழந்தனா். இது தொடா்பாக, சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை தாமாக முன்வந்து விசாரணை நடத்தியது. விசாரணையின் போது, காவல் துறையினருக்கு மனரீதியான ஆலோசனைகளை வழங்கும் பயிற்சி அளிக்க நீதிமன்றம் அறிவுறுத்தியது.
இந்த வழக்கு நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், ஆா்.ஹேமலதா அமா்வு முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, மன அழுத்தத்தில் இருப்பதாகக் கண்டறியப்பட்ட 4,484 போலீலாருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தமிழக அரசின் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனா்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
பீகார் துணை முதல்வராக பொறுப்பேற்றதற்கு வாழ்த்திய மு.க.ஸ்டாலினுக்கு, நன்றி, நாம் அனைவரும் ஒன்றிணைந்து இந்த எதேச்சதிகார அரசை வீழ்த்துவோம் என தேஜஸ்வி யாதவ் ட்வீட்டரில் நன்றி தெரிவித்துள்ளார்.
காஷ்மீர் ரஜோரி பகுதியில் தற்கொலைப்படை நடத்திய தாக்குதலில், 3 இந்திய வீரர்கள், 2 பயங்கரவாதிகள் உயிரிழந்தனர்.
நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய, நுபுர் சர்மாவுக்கு எதிரான அனைத்து வழக்குகளையும் டெல்லி காவல் துறைக்கு மாற்றி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு, சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.
குடியரசு துணைத் தலைவராக ஜெகதீப் தங்கர் இன்று பதவியேற்கிறார். அவருக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பதவி பிரமாணம் செய்து வைக்கிறார்
அதிமுக தலைமை அலுவலகத்தில் புகுந்து முக்கிய ஆவணங்களை எடுத்து சென்ற விவகாரத்தில், ஓபிஎஸ் மீதான வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரிய மனு, சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி, தமிழக மீனவர்கள் 9 பேர், புதன்கிழமை இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.