*விசா வழங்கினால், அவர் மீண்டும் ஆப்கானிஸ்தான் திரும்பாமல் போகலாம் – உள்விவகார அமைச்சகம்
*உள்விவகார அமைச்சகத்தின் இந்த முடிவு மொத்த குடும்பத்தையும் நொறுங்க வைத்துள்ளது என கூறுகின்றார் Khadim Hayat.
கடந்த 20 ஆண்டுகளாக பிரித்தானியாவில் குடியிருக்கும் ஆப்கான் குடும்பத்திற்கு முக்கிய தருணத்தில் விசா வழங்க மறுத்துள்ளது உள்விவகார அமைச்சகம்.
பிரித்தானியாவில் கடந்த 20 ஆண்டுகளாக குடியிருந்து வருகின்றனர் Khadim Hayat குடும்பத்தினர்.
இவரது பெற்றோர் பாகிஸ்தானில் இருந்து 1994ல் லண்டனில் குடியேறிவர்கள்.
இந்த குடும்பத்தில் இருந்து மருத்துவர்கள், தொழில்முனைவோர், கணக்காளர்கள் மற்றும் விஞ்ஞானிகள் வரையில் பிரித்தானியாவில் பணியாற்றி வருகின்றனர்.
தற்போது Khadim Hayat-ன் சகோதருக்கு திருமணம் முடிவாகியுள்ளது. மேலும் Khadim Hayat பல்கலைக்கழக படிப்பை முடித்து பட்டம் பெற உள்ளார்.
இந்த இரு விழாவிற்காக ஆப்கானிஸ்தானில் இருந்து தமது 82 வயதான பாட்டியை அழைத்துவர Khadim Hayat முயன்று வருகிறார்.
ஆனால், Fatima Hayat(82)கு விசா வழங்கினால், அவர் மீண்டும் ஆப்கானிஸ்தான் திரும்பாமல் போகலாம் என உள்விவகார அமைச்சகம் கருதுவதாக கூறப்படுகிறது.
@Khadim Hayat
இதனால் அவருக்கு விசா வழங்க மறுத்து வருகிறது.
2019ல் இருந்தே பாட்டியை காண வேண்டும் என்ற ஆசையில் ஆப்கானிஸ்தான் செல்ல முயன்று, கொரோனா ஊரடங்கு, பின்னர் தாலிபான்களின் ஆக்கிரமிப்பு என முடியாமல் போயுள்ளது.
உள்விவகார அமைச்சகத்தின் இந்த முடிவு மொத்த குடும்பத்தையும் நொறுங்க வைத்துள்ளது என கூறுகின்றார் Khadim Hayat.
மேலும், தற்போதைய சூழலில் பிரித்தானியாவில் இருந்து ஆப்கானிஸ்தான் செல்வது என்பது சிக்கலான விடயம்.
அதனாலையே, பாட்டியை லண்டனுக்கு அழைக்க முடிவு செய்துள்ளார் Khadim Hayat.
மேலும், ஆப்கானிஸ்தானில் இருந்து பாகிஸ்தான் செல்வது என்பது சிக்கல் மிகுந்தது எனவும் Khadim Hayat கூறுகிறார்.
மொத்தம் 27 ஆவணங்களை உள்விவகார அலுவலகத்திற்கு இந்த விவகாரம் தொடர்பில் சமர்ப்பித்தும் அவர்கள் திருப்தியாக இல்லை என்றே பதிலளித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.