தங்கம் விலை இன்று எவ்வளவு குறைந்திருக்கு தெரியுமா.. இது வாங்க சரியான நேரம் தான்!

அமெரிக்காவின் மத்திய வங்கியானது சமீபத்திய மாதங்களாகவே தொடர்ந்து வட்டி விகிதத்தினை அதிகரித்து வருகின்றது. இதற்கிடையில் பணவீக்கமானது சற்று குறையத் தொடங்கியுள்ளதற்கான அறிகுறிகளை காண முடிகிறது.

கடந்த அமர்வில் நுகர்வோர் பனவீக்கம் குறித்த தரவானது வெளியான பிறகு தங்கம் விலையானது பலத்த ஏற்றத்தினை கண்டது. எனினும் முடிவில் 0.1% மட்டுமே ஏற்றத்தில் முடிவடைந்தது.

இதற்கிடையில் இன்று காலை தொடக்கத்திலேயே சரிவில் தொடங்கிய தங்கம் விலையானது, தொடர்ந்து சரிவிலேயே கணப்படுகிறது. இது இன்னும் சரியுமா? நிபுணர்களின் கணிப்பு என்ன? கவனிக்க வேண்டிய காரணிகள் என்னென்ன? வாருங்கள் பார்க்கலாம்.

தங்கம் விலை சரிவு.. இன்று வாங்க சரியான வாய்ப்பு தான்..எவ்வளவு குறைந்திருக்கு தெரியுமா?

வட்டி அதிகரிக்கலாம்?

வட்டி அதிகரிக்கலாம்?

சிலர் வரவிருக்கும் கூட்டத்திலும் வட்டி விகிதம் அதிகரிக்கலாம் என்று கூறி வரும் நிலையில், அமெரிக்க மத்திய வங்கி அதிகாரிகள் தரப்பில், வட்டி விகிதத்தினை குறைப்பதற்கான முடிவுகள் இன்னும் எடுக்கப்படவில்லை. இந்த ஆண்டின் இறுதிக்குள் வட்டி விகிதம் 3.9% ஆகவும், 2023ம் ஆண்டின் இறுதிக்குள் 4.4% ஆகவும் இருக்கலாம்.

என்ன ஆகுமோ?

என்ன ஆகுமோ?

ஆனால் அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் குறையத் தொடங்கலாம் என்பது சாத்தியமானது அல்ல, இது நிலைமை எப்படி மாறும் என்பது பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். ஆக நீண்டகால நோக்கில் தங்கம் விலையானது அதிகரிக்கவே பல வாய்ப்புகள் உள்ளன. ஏனெனில் உக்ரைன் – ரஷ்யா பிரச்சனை, சீனா – தாய்வான் பிரச்சனை என இரண்டுமே எந்த நேரத்தில் என்னவாகுமோ என்ற அச்சத்தினை ஏற்படுத்தியுள்ளன. ஆக இது பாதுகாப்பு புகலிடமான தங்கத்திற்கு சாதகாமாக அமையலாம்.

வலுவான லெவல்
 

வலுவான லெவல்

தங்கம் விலையானது இன்று சரிவினைக் கண்டு இருந்தாலும், தொடர்ந்து அவுன்ஸுக்கு 1800 டாலர்களுக்கு மேலாகவே காணப்படுகிறது. இது உணர்வுபூர்வமாக தங்கம் விலை ஏற்றம் காணலாம் என்ற எண்ணத்தையே ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையில் தங்கம் விலையானது இந்திய சந்தையில் 10 கிராமுக்கு 54,000 ரூபாயினை தொடலாம் என நிபுணர்கள் எதிர்பார்க்கின்றனர்.

 சர்வதேச சந்தையில் என்ன நிலவரம்?

சர்வதேச சந்தையில் என்ன நிலவரம்?

தங்கம் விலையானது தற்போது சர்வதேச சந்தையில் அவுன்ஸூக்கு 13.25 டாலர்கள் குறைந்து, 1800.40 டாலராக வர்த்தகமாகி வருகின்றது. இதே வெள்ளி விலை 1.49% குறைந்து, 20.433 டாலராக குறைந்து காணப்படுகின்றது. தங்கம் விலை சற்று குறைந்து காணப்படும் நிலையில், வெள்ளி விலை சற்று குறைந்து தான் காணப்படுகின்றது.

 இந்திய சந்தையில் தங்கம் விலை

இந்திய சந்தையில் தங்கம் விலை

தங்கம் விலையானது தற்போது இந்திய சந்தையில் 10 கிராமுக்கு 206 ரூபாய் குறைந்து, 52,035 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இதே வெள்ளி விலை கிலோவுக்கு 458 ரூபாய் குறைந்து, 58,502 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. தங்கம் மற்றும் வெள்ளி விலையும் குறைந்த் சற்று குறைந்து தான் காணப்படுகின்றது.

 ஆபரண தங்கம் விலை

ஆபரண தங்கம் விலை

சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது சற்று குறைந்துள்ள நிலையில், ஆபரண தங்கம் விலையும் இன்று குறைந்து காணப்படுகின்றது. சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலையானது, கிராமுக்கு 33 ரூபாய் குறைந்து, 4860 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 264 ரூபாய் குறைந்து, 38,880 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

 தூய தங்கம் விலை

தூய தங்கம் விலை

இதே சென்னையில் இன்று தூய தங்கத்தின் விலையும் இன்று குறைந்து காணப்படுகின்றது. இது கிராமுக்கு 36 ரூபாய் குறைந்து, 5302 ரூபாயாகவும், இதே சவரனுக்கு, 42,416 ரூபாயாகவும், 10 கிராமுக்கு 53,020 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

 வெள்ளி விலை நிலவரம்

வெள்ளி விலை நிலவரம்

ஆபரண வெள்ளி விலை இன்று சற்று குறைந்து காணப்படுகின்றது. இது தற்போது கிராமுக்கு 20 பைசா குறைந்து, 64 ரூபாயாகவும், இதே 10 கிராமுக்கு 640 ரூபாயாகவும், இதுவே கிலோவுக்கு 64,000 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

 முக்கிய நகரங்களில் விலை என்ன?

முக்கிய நகரங்களில் விலை என்ன?

22 கேரட் தங்கம் விலை (10 கிராம்)

சென்னையில் இன்று – ரூ.48,600

மும்பை – ரூ.47,350

டெல்லி – ரூ.47,550

பெங்களூர் – ரூ.47,400

கோயமுத்தூர், மதுரை என பல முக்கிய நகரங்களிலும் – ரூ.48,600

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

gold price on 11th August 2022: Gold prices are looking strong even as inflation has started to ease

gold price on 11th August 2022: Gold prices are looking strong even as inflation has started to ease/தங்கம் விலை இன்று எவ்வளவு குறைந்திருக்கு தெரியுமா.. இது வாங்க சரியான நேரம் தான்!

Story first published: Thursday, August 11, 2022, 10:30 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.