திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்தலின் போது 2017ம் ஆண்டு நடைபெற்ற கொடநாடு கொலை கொள்ளை வழக்குகளை தீர விசாரித்து அதன் பின் இருக்கும் மர்மங்களை கண்டுபிடிப்பார் என்று கூறப்பட்டது. இந்நிலையில் பதவியேற்றபோது, இந்த விவகாரம் சமந்தப்பட்ட அனைவரையும் கைது செய்வோம் என்று முதல்வர் கூறியிருந்தார். மேலும் இதில் அரசியல் தலையீடு இருக்காது என்று கூறினார்.
இந்நிலையில் கடந்த 14 மாதங்களாக சிறப்பு புலனாய்வு குழு இந்த விவகாரம் தொடர்பாக நடத்திய விசாரணையில் குறிப்பிட தகுந்த முன்னேற்றம் இல்லை என்றே கூற முடியும். ஜெயலலிதா மரணமடைந்ததை தொடர்ந்து இந்த சம்பவம் நடந்ததால் பொதுமக்கள் இந்த விவகாராத்தில் அதிக கனவம் கொண்டனர். காவல்துறையினரின் தகவல் குறிப்புகளின்படி கடந்த ஏப்ரல் 4, 2017ம் ஆண்டு, ஜெயலாலிதாவின் முன்னாள் ஓட்டுநரான சி கனகராஜ் தலைமையில் 11 பேர் கொண்ட கும்பல் கொடநாடு எஸ்டேட்டில் உள்ள பணத்தை எடுக்க முயற்சி செய்தது. அங்கு காவலில் ஈடுபட்ட கிருஷ்ண தாபாவை அடித்து லாரியில் கட்டி வைத்தனர். மற்றொரு காவலாலியான ஓம் பகதூரை தாக்கினர். இந்நிலையில் முதல் குற்றவாளியான கனராஜ் என்பவரை கைது செய்ய தேடுதல் வேட்டை நடைபெற்றது.
இந்நிலையில் கனராஜ் எனப்வர் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் ஊரைச் சேர்ந்தவர். இந்நிலையில் கனகராஜ் சென்னை- சேலம் சாலையில் ஏற்பட்ட விபத்தில் சம்பவம் நடந்த 5 நாட்களில் கொல்லப்படுகிறார். கனராஜை தவிர மற்ற நபர்கள் அனைவரும் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். அவர் கொல்ல பட்ட அதேநாளில் திரிசூரை சேர்ந்த சயன் என்பவரும் பாலகாட்டுக்கு அருகில் சாலை விபத்தில் சிக்குகிறார். ஆனால் இந்த விபத்தில் இவரது மனைவி மற்றும் மகள் கொல்லப்படுகிறார்கள் இவர் தப்பிக்கிறார். இந்நிலையில் 29 வயதான கொடநாடு எஸ்டேட்டில் கம்யூட்டர் ஆபரேட்டராக வேலை செய்த தினேஷ் குமார் கோத்தகிரியில் உள்ள அவரது வீட்டில் அதே ஆண்டு ஜூலை மாதம் இறந்த நிலையில் இருந்தார். இந்நிலையில் இந்த மரணத்தை தற்கொலை என்று காவல்துறையினர் கூறுகின்றனர். கிருஷ்ண பகதூர் என்பவர் அவரது சொந்த நாடான நேப்பாளத்திற்கு செல்கிறார். ஆனால் அவர் இப்போது காணவில்லை.
இந்நிலையில் இந்த வழக்கு மீதனா ஆர்வம் குறையத் தொடங்கியது. ஜனவரி மாதம் 2019ம் ஆண்டு வழக்கில் தொடர்புடைய சயன் நடத்திய பத்திரிக்கையாளர் சந்திப்பால் வழக்கு மீண்டும் கவனம் பெற்றது. இந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் கனராஜ் இந்த சம்பவத்திற்கு தலைமை தாங்கினார் என்றும் எடப்பாடி பழனிசாமி கூறியதன் அடிப்படையில்தான் இதை அவர் செய்யச்சொன்னதாகவும் கூறினார். மேலும் அங்கிருந்த பணக் கட்டுகளையும் ஆவணங்களையும் திருடுவதே அவர்களுக்கு வழங்கப்பட்ட வேலை என்றும் கூறினார். காவல்துறையினர் கூறுகையில், இரண்டு ரிஸ்ட் கடிகாரங்கள் மற்றும் கிரிஸ்டல் பொம்மைகள் கொள்ளையின் காணமல்போனது என்று கூறியுள்ளனர்.
இந்த குற்றச்சாடுகளை எடப்பாடி பழனிசாமி மறுத்துவிட்டார். இந்நிலையில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு மீண்டும் விசாரிக்கபட்டு வருகிறது. கடந்த ஆக்ஸ்டு மாதம் எடப்பாடி கூறுகையில் “கொடநாடு கொலை தொடர்பான விசாரணை முடிந்துவிட்டது. இதற்கு சமந்தமான அனைத்து குற்றவாளிளையும் நீதிமன்றத்திற்கு முன்பு ஆகஸ்டு 27ம் தேதி ஆஜர்படுத்த வேண்டும் என்று கூறபட்டது. என்னை மற்றும் மற்ற அதிமுக தலைவர்களை இந்த வழக்கில் சேக்கவே சயன் வாக்குமூலத்தை இந்த வழக்கில் இப்போது சேர்த்துள்ளனர். இந்த வழக்கில் குற்றம்சாட்டபட்ட நபர்களை திமுக ஜாமினில் எடுக்க உதவுகிறது” என்று கூறினார்.
சிறப்பு புலனாய்வை தலைமை வகிக்கும் ஐஜி (மேற்கு மண்டலம்) ஆர் சுதாகர் விசாரணை தொடர்பாக கருத்து தெரிவிக்க விரும்பவில்லை. இந்த குழுவில் இருக்கும் மற்றொரு அதிகாரி கூறுகையில் “ இந்த விசாரணையின் முதலில் கனகராஜ் மரணம் தொடர்பாக பல மர்மங்கள் இருப்பதாக தோன்றியது. இந்நிலையில் அவரை காவல்துறையினர் மற்றும் இனியொரு குழுவும் தேடியதாகவும் தகவல் வெளியானது. திருடிய பொருட்களை அவர் ஒப்படைக்காமல் அதிக பணம் கேட்டதால், அவரை ஒரு குழு தேடியது. இந்நிலையில் இந்த குழுவினருக்கும் கனகராஜ் மரணத்திற்கும் தொடர்பு இருக்கிறதா ? என்ற விசாரணை காவல்துறையினரால் செய்ய முடிவில்லை. இதற்கு அரசியல் காரணகள்தான் காரணம் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் எடப்படி பழனிசாமி ஆட்சியில் இருக்கும்போது பணியாற்றிய அதிகாரிகள் இன்னும் பணியில் இருப்பதால், இந்த விவகாரம் தொடர்பான ஆவணங்கள் கிடைப்பதில் சிக்கல் இருக்கிறது. மேலும் பணத்திற்காக மட்டும் இந்த கொள்ளை நடக்கவில்லை என்றும் கம்யூட்டர் ஹார்டு டிஸ்க் உள்ளிட்ட ஆணவங்களும் இதில் இருக்கலாம் என்றும் இது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தபடவில்லை என்று அந்த அதிகாரி கூறுயுள்ளார்.
இந்நிலையில் இந்த விசாரணை தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழுவிக்கு சமந்தபட்டவர்கள் கூறியதன்படி, சசிகலாவிடம் கடந்த ஏப்ரல் மாதத்தில் இரண்டு நாட்கள் விசாரணை நடைபெற்றுள்ளது. கடந்த வார இறுதி நாட்களில், நமது அம்மா நாளேட்டின் முன்னாள் ஆசிரியர் மருது அழகுராஜாவிடம் விசாரணை நடைபெற்றது. கனராஜுடன் வேலை செய்த குணசேகரன் என்ற ஜெயலலிதாவின் முன்னாள் ஓட்டுநரிடமும், முன்னாள் அதிமுக எம்எல்ஏ விசி ஆறுகுட்டியிடம் விசாரணை நடைபெற்றது.
தற்போது ஓபிஎஸ் அணியில் உள்ள வைத்தியலிங்கம் கூறுகையில் “ கொடநாடு வழக்கு விசாரணை தொடர்பாக மூன்று மாதங்கள் வரை காத்திருப்போம். சரியான முடிவுகள் வரவில்லை என்றால் நாங்களே இந்த விசாரணையை கையில் எடுப்போம்” என்று கூறியுள்ளார்.