இந்திய பங்கு சந்தையானது சமீபத்திய காலமாகவே அதிகளவிலான ஏற்ற இறக்கத்தில் இருந்து வருகின்றது. குறிப்பாக அமெரிக்க மத்திய வங்கியின் முடிவால் தொடர்ந்து இந்திய சந்தையில் இருந்து முதலீடுகள் வெளியேறி வந்தன.
எனினும் நடப்பு மாத தொடக்கத்தில் இருந்து சற்று ஏற்றம் காண ஆரம்பித்துள்ளது. குறிப்பாக சென்செக்ஸ் நடப்பு மாதத்தில் மட்டும் 3.2% ஏற்றம் கண்டுள்ளது.
தற்போது சென்செக்ஸ் 523.49 புள்ளிகள் அதிகரித்து, 59,340.78 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 122.4 புள்ளிகள் அதிகரித்து, 17,657.15 புள்ளிகளாகவும் காணப்படுகிறது.
7000 ரூபாய்க்கு ஆசைப்பட்டு 2 லட்ச ரூபாயை இழந்த 62 வயதான நீலம் சிங்..!
பணவீக்கம் சரிவு?
கடந்த ஜூன் மாதத்துடன் ஒப்பிடும்போது, ஜூலை மாதத்தில் அமெரிக்காவின் பணவீக்க விகிதமானது சற்று குறைந்துள்ளது. இதனால் வட்டி விகிதம் அதிகரிப்பு வரும் அமர்வில் இருக்காது என்று ஒரு தரப்பினர் எதிர்பார்க்கின்றனர். இதனால் இனி பெரியளவில் முதலீடுகள் வெளியேறாது என்ற எதிர்பார்ப்பும் இருந்துள்ளது.
தேவை அதிகரிக்கலாம்
இதற்கிடையில் கொரோனாவில் இருந்து முழுமையாக வெளியேறி வந்துள்ள நாடுகளில், வாகனங்கள் உள்ளிட்ட பல துறைகளிலும் தேவை அதிகரிக்கலாம் என்ற எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் நிறுவனங்கள் வளர்ச்சி காணத் தொடங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முதலீடுகள் அதிகரிக்கலாம்
தொடர்ந்து 9 மாதங்களுக்கு பிறகு கடந்த ஜூலை மாதத்திலேயே அன்னிய முதலீடுகல் அதிகரித்துள்ளது. இது வரவிருக்கும் மாதத்திலும் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இந்திய சந்தையானது நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
காலாண்டு முடிவுகள்
தற்போது ஜூன் காலாண்டு முடிவுகளை பல நிறுவனங்களும் வெளியிட்டு வரும் நிலையில், அதுவும் சந்தையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம். இதற்கிடையில் சர்வதேச சந்தையின் போக்கும் இந்திய சந்தையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம்.
நிஃப்டி குறியீடு
நிஃப்டி குறியீட்டில் உள்ள விப்ரோ, டெக் மகேந்திரா, ஆக்ஸிஸ் வங்கி, டைட்டன் நிறுவனம், பஜாஜ் பைனான்ஸ் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே டாடா கன்சியூமர் ப்ராடக்ஸ், அப்பல்லோ ஹாஸ்பிட்டல்ஸ், பார்தி ஏர்டெல், ஹிண்டால்கோ, ஐடிசி உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
சென்செக்ஸ் குறியீடு
சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள டெக் மகேந்திரா, விப்ரோ,ஆக்ஸிஸ் வங்கி, டைட்டன் நிறுவனம், பஜாஜ் பைனான்ஸ் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே பார்தி ஏர்டெல், ஐடிசி, என் டி பி சி, எம் &எம், ஹெச் யு எல் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
market update: sensex jumped 500 points above, nifty trade above 17650
market update: sensex jumped 500 points above, nifty trade above 17650/மீண்டும் 59,000 புள்ளிகளை தாண்டிய சென்செக்ஸ்.. முதலீட்டாளர்கள் செம ஹேப்பி!