காணாமல் போனதாக கருதப்பட்ட கனேடிய பெண்: சமீபத்தில் தெரியவந்த உண்மையும் சோக செய்தியும்..


 *1980முதல் காணாமல் போனதாக கருதப்பட்டு தேடப்பட்டுவந்தார் ஒரு கனேடிய பெண்.

*சமீபத்தில் அவர் வெளிநாடு ஒன்றில் வாழ்ந்துவந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கனடாவில் நீண்ட காலமாக கானாமல் போனதாக கருதப்பட்டு வந்த ஒரு பெண், வெளிநாடு ஒன்றில் வாழ்ந்துவந்தது தெரியவந்துள்ளது.

ஒன்ராறியோவிலுள்ள Vanier என்ற இடத்தில் தனது குடும்பத்தினருடன் வாழ்ந்து வந்த நான்சி (Dale Nancy Wyman) என்ற இளம்பெண், 1980ஆம் ஆண்டு, ஜூலை மாதம் 16ஆம் திகதி திடீரென மாயமானார்.

பொலிஸ் விசாரணையில் நான்சி டாக்சி ஒன்றில் இறுதியாக பயணித்தது தெரியவந்தது. அந்த டாக்சி சாரதியை விசாரித்தபோது, தான் எங்கே போகிறேன் என தனக்கே தெரியவில்லை என்றும், ரொரன்றோ அல்லது மொன்றியலுக்குச் செல்லலாம் என்றும் நான்சி கூறியதாக அவர் தெரிவித்தார்.

அதற்குப் பிறகு நான்சியை யாரும் பார்க்கவில்லை.
குடும்பத்தார் நான்சியைக் காணாமல் கவலையுடன் வாழ்ந்துவந்த நிலையில், சுமார் 40 ஆண்டுகளுக்குப் பிறகு அவர்களுக்கு ஒரு செய்தி கிடைத்துள்ளது.

காணாமல் போனதாக கருதப்பட்ட கனேடிய பெண்: சமீபத்தில் தெரியவந்த உண்மையும் சோக செய்தியும்.. | Missing Woman In Canada Found After40 Years

Facebook

ஆம், நான்சி இதுவரை வெளிநாடு ஒன்றில் வாழ்ந்துவந்துள்ளார். இந்த தகவலை மூன்றாவது தரப்பு நபர் ஒருவர் தெரிவித்துள்ள நிலையில், அவர் எங்கேயோ ஓரிடத்தில் இருக்கிறார் என்ற தகவல் குடும்பத்தினருக்கு மகிழ்ச்சியை அளித்தாலும், கூடவே சமீபத்தில் நான்சி உயிரிழந்துவிட்டதாகவும் அதே நபர் தெரிவித்துள்ள செய்தி அவரது குடும்பத்தினருக்கு கவலையையும் ஏமாற்றத்தையும் அளித்துள்ளது.
நான்சி எந்த நாட்டில் வாழ்ந்துவந்தார் என்பதை பொலிசார் தெரிவிக்கவில்லை.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.