அவர் ஒழுக்கம் கெட்டவர்… பிரித்தானிய பிரதமர் வேட்பாளர் மீது அதிரடிக் குற்றச்சாட்டு


*ரிஷி, மக்களிடம் வரி வாங்கி மக்களுக்காக செலவு செய்யும் பழங்கால கொள்கையைப் பின்பற்றுகிறார் என லிஸ் ட்ரஸ் தரப்பு விமர்சனம்.

*பதிலுக்கு, லிஸ் ட்ரஸ் ஒழுக்க ரீதியாக சரியாக முடிவெடுக்கத் தெரியாதவர் என ரிஷி தரப்பில் விமர்சனம் எழுந்துள்ளது.

பிரித்தானிய பிரதமர் போட்டிக்கான நடைமுறைகள் சூடுப்பிடிக்கத் துவங்கியுள்ளது போலவே, பிரதமர் வேட்பாளர்களுக்கிடையிலான விவாதங்களும் சூடுபிடிக்கத்துவங்கியுள்ளன.

தான் பிரதமரானால் நாட்டுக்கு என்ன செய்வேன் என்று கூறி வாக்கு சேகரிக்கத் துவங்கிய பிரதமர் வேட்பாளர்கள், தற்போது ஒருவரை ஒருவர் நேரடியாகத் தாக்கிப் பேசத் துவங்கியுள்ளார்கள்.

அவ்வகையில், ரிஷியின் கொள்கைகள், முன்னாள் பிரித்தானிய பிரதமரும், சேன்ஸலருமான Gordon Brown என்பவருடைய கொள்கைகளைப் போல பழங்கால கொள்கைகள் என விமர்சித்திருந்தார் அவரை எதிர்த்துப் போட்டியிடும் லிஸ் ட்ரஸ்.

அவர் ஒழுக்கம் கெட்டவர்... பிரித்தானிய பிரதமர் வேட்பாளர் மீது அதிரடிக் குற்றச்சாட்டு | Rishi Sunak Brands Liz Truss Immoral

@PA

அதாவது, மக்களிடமிருந்து வரி வாங்கி மக்களுக்காக செலவு செய்வதுதான் ரிஷியின் கொள்கை. அது பழங்கால கொள்கை. Gordon Brown அதைத்தான் பின்பற்றினார். ஆனால், மக்கள் தங்கள் பணத்தைத் தாங்களே வைத்திருக்கத்தான் விரும்புகிறார்கள்.

ரிஷியின் வரி வாங்கி செலவு செய்யும் கொள்கையோ நம்மை பொருளாதார ரீதியில் பின்னோக்கித் தள்ளிவிடும் என்கிறார் அவர்.
லிஸ் ட்ரஸ் ரிஷியை Gordon Brownஉடன் ஒப்பிட்டுள்ளது ரிஷி தரப்பினரை எரிச்சலூட்டியுள்ளதால், அவர்கள் லிஸ் ட்ரஸ்ஸை ஒழுக்கம் கெட்டவர் என விமர்சித்துள்ளார்கள்.

அவர் ஒழுக்கம் கெட்டவர்... பிரித்தானிய பிரதமர் வேட்பாளர் மீது அதிரடிக் குற்றச்சாட்டு | Rishi Sunak Brands Liz Truss Immoral

@PA

அதாவது,லிஸ் ட்ரஸ் ஒழுக்க ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும், சரியாக முடிவெடுக்கத் தெரியாதவர் என்று கூறியுள்ளார்கள் அவர்கள்.
இதற்கிடையில், போலியான வாக்குறுதிகளைக் கொடுத்து வெற்றி பெறுவதை விட தோல்வியை ஏற்றுக்கொள்வேன் என்று கூறியுள்ளார் ரிஷி.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.