கௌதம் அதானியின் அடுத்த டார்கெட் அலுமினியம்.. ஒடிசா-வுக்கு அடித்த ஜாக்பாட்..!

அதானி எண்டர்பிரைசஸ் ஒடிசா-வில் அலுமினியம் சுத்திகரிப்பு நிலையத்தை அமைக்கச் சுமார் 5.2 பில்லியன் டாலர் அளவிலான தொகையை முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளார்.

ஆசியாவின் மிகப் பெரிய பணக்காரரான கௌதம் அதானி தனது வர்த்தகத்தை வேகமாக விரிவாக்கம் செய்து வரும் நிலையில் உலோக துறையை முக்கியமானது என நம்புகிறார்.

இதன் மூலம் அதானி குழுமம் தற்போது காப்பர், ஸ்டீல், அலுமினியம் என 3 முக்கிய உலோக துறைக்குள்ள நுழைந்துள்ளது.

25 ஆண்டுகளாக Parle-G பிஸ்கட் விலை ரூ.5 தான். … எப்படி சாத்தியம்?

 அதானி குழுமம்

அதானி குழுமம்

அதானி குழுமத்தின் முக்கிய நிறுவனமான அதானி எண்டர்பிரைசஸ் சுமார் 41,653 கோடி ரூபாய் அளவிலான முதலீட்டில் ராயகடாவில் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் கேப்டிவ் மின் உற்பத்தி நிலையத்தை உருவாக்க ஒப்புதல் பெற்றுள்ளது என்று மாநில முதல்வர் நவீன் பட்நாயக் அலுவலகம் புதன்கிழமை ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளது.

அலுமினியம் சுத்திகரிப்பு தொழிற்சாலை

அலுமினியம் சுத்திகரிப்பு தொழிற்சாலை

அதானி எண்டர்பிரைசஸ் அமைக்க உள்ள புதிய அலுமினியம் சுத்திகரிப்பு தொழிற்சாலை ஆண்டுக்கு 4 மில்லியன் டன் திறன் கொண்டதாக இருக்கும் தெரிகிறது. 2021 டிசம்பர் மாதம்
முந்த்ரா அலுமினியம் லிமிடெட் அமைத்து உலோக துறையில் தனது வர்த்தகத்தைத் துவங்கியது ஆதானி குழுமம்.

போட்டி
 

போட்டி

இத்துறையில் ஏற்கனவே ஆதித்யா பிர்லா குரூப் மற்றும் லண்டனை சேர்ந்த வேதாந்தா ரிசோர்ஸ் ஆகியவை இருக்கும் நிலையில் இத்துறையில் முன்னோடியாக வர வேண்டும் என்பதற்காகப் பெரும் தொகையை முதலீடு செய்யத் திட்டமிட்டு உள்ளது அதானி குழுமம்.

காப்பர் தொழிற்சாலை

காப்பர் தொழிற்சாலை

காப்பர் தொழிற்சாலை

 ஸ்டீல் தொழிற்சாலை

ஸ்டீல் தொழிற்சாலை

தென் கொரியாவின் போஸ்கோ மற்றும் அதானி குழுமம் இணைந்து குஜராத்தில் 5 பில்லியன் டாலர் மதிப்பிலான ஒருங்கிணைந்த ஸ்டீல் உற்பத்தி தொழிற்சாலை உருவாக்க ஒப்புக் கொண்டுள்ளன. இதன் மூலம் அதானி குழுமம் ஸ்டீல், அலுமினியம், காப்பர் ஆகிய 3 துறையிலும் இறங்க உள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Gautam Adani plans to build alumina refinery in odisha with 41653 crore investment

Gautam Adani plans to build alumina refinery in odisha with 41653 crore investment கௌதம் அதானியின் அடுத்த டார்கெட் அலுமினியம்.. ஒடிசா-வுக்கு அடித்த ஜாக்பாட்..!

Story first published: Thursday, August 11, 2022, 16:41 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.